இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கெல்லாம் காரணம் இனவாதம் மதவாதம் என யாராவது சொன்னால் அது இந்த நூற்றாண்டின் மிகபெரும் காமெடியே தவிர வேறொன்றுமில்லை
இலங்கையில் சிங்களர் பெருவாரிநாடு சந்தேகமில்லை , பவுத்தம் அதன் தேசிய மதமாக அங்கீகரிக்கபட்டிருக்கின்றது
அங்கு ஆட்சி செலுத்துவோர் பெரும்பாலும் புத்தமதத்தவர் அல்ல, அங்குள்ள சட்டபடி புத்தமதம் சார்ந்தோர் அதிபராக முடியும், மதமும் கலாச்சாரமும் அப்பொழுதுதான் நிலைக்கும் என்ற ஏற்பாடு அது
இன்றும் பல நாடுகளில் மன்னராட்சி ஏன் தொடர்கின்றது என்றால் முக்கிய காரணம் அரசமதம் என ஒன்று இல்லாவிட்டால் அது அழிந்துவிடும் என்பதே, அதனாலே பல நாடுகள் மன்னர்களை ஆதரிக்கின்றன
அங்கு டட்லி சேனநாயகா முதல் ஜெயவர்த்தனே இன்றைய ராஜபக்சேக்கள் வரை யாரும் பிறப்பால் பவுத்தர்கள் அல்ல, அவர்கள் பிறப்பால் கிறிஸ்தவர்கள்
ராஜபக்சேவின் தந்தையும் முன்னாள் எம்பியுமான டான் ஆல்வின் ராஜபக்சே ஒரு கிறிஸ்தவர்
இவர்கள் திறமையானவர்கள், கற்றவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதால் தேர்தலில் போட்டியிட வருவார்கள் பெருவாரி பவுத்த சிங்களவரும் ஆதரிப்பார்கள், வென்றவர்கள் கடமைக்கு புத்தமதம் தழுவி சட்டபடி பவுத்தனாக ஆட்சியில் அமர்வார்கள்
சிங்கள நாயக்கர்களின் குலதெய்வமான திருப்பதிபெருமாளையும் பார்க்க வருவார்கள்
அங்கு மக்கள் இனவாதம் பிரிவினைவாதமெல்லாம் பேசவில்லை
பெருவாரி வாக்கு வங்கிக்கு எல்லா நாட்டிலும் சில சலுகைகள் உண்டு மக்களாட்சியின் சாபம் அது, அதுவன்றி ஆட்சி அமைக்க முடியாது
இலங்கையில் இனவாதம் மதவாதம் சிங்களவருக்கு தனி உரிமை என்பவர்கள் இந்தியாவின் இட ஒதுக்கீட்டையும், சில வகுப்பினருக்கான தனி சலுகைகளையும் வசமாக மறைப்பார்கள்
இலங்கையில் நடந்தால் அது இனபாகுபாடு என்பதும் தமிழகத்தில் நடந்தால் "சமூக நீதி" என்பதெல்லாம் எவ்வகை நியாயமோ தெரியாது
உண்மையில் இலங்கையின் சிக்கலுக்கு காரணம் இரண்டு
முதலாவது கொரோனா காரணமாக அவர்களின் சுற்றுலா உள்ளிட்ட விஷயங்கள் பாதிக்கபட்டது, இரண்டாவது இயற்கை விவசாயம் மூலம் சம்பாதிப்போம் என நாம் தமிழர் போல் கிளம்பியது
இயற்கை விவசாயம் நல்லதுதான் சந்தேகமில்லை, பூமியின் தத்துவபடி அதன் ஆகசிறந்த விளைச்சல் நவீன விவசாயத்தை ஒப்பிடும்பொழுது குறைவு, இயற்கையின் விதி அது
ஊசிபோட்டு பால்கறக்கும் மாட்டுக்கும் நாட்டு மாட்டுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது
இயற்கை விவசாயம் வேண்டுமானால் சாகுபடி பரப்பு அதிகரிக்கபட வேண்டும், இப்பொழுதுள்ள மக்கள் தொகைக்கு இப்பொழுதுள்ள நிலங்களை விட ஐந்துமடங்கு நிலம் வேண்டும்
அக்காலத்தில் தொடர்ந்து விளைநிலங்கள் ஏன் பெருக்கபட்டன என்றால் இதுதான்
புதிதாக விவசாய நிலத்தை பெருக்காமல் இருக்கும் நிலத்திலே இயற்கை விவசாயம் என்பது விளைச்சலை சுருக்கும், இலங்கையில் இதுதான் நடந்தது
இதையெல்லாம் தாண்டி அவர்கள் சிக்கிய விஷயம் சீனாவிடம் நெருங்கியது
சீனா உலக அரசியலுக்கு புதிதான நாடு, கடன் கொடுப்பதும் அதை வசூலிப்பதும் அவர்களின் உரிமை என்றாலும் அந்த அணுகுமுறை மகா குழப்பமானது பலரால் புரிந்துகொள்ளமுடியாதது
அமெரிக்கா, பிரிட்டனை போல் சீனாவினை அணுகித்தான் பாகிஸ்தான் குப்புற கிடக்கின்றது அதில்தான் இலங்கையும் சேர்ந்துவிட்டது
ஹம்பந்தோட்டா, கொழும்பு துறைமுக முனையம், வட இலங்கையில் அனுமதி என இலங்கை சீனாவிடம் விழ அமெரிக்கா முகம் சுழித்தது
அதுவும் குவாட் அமைப்பு, பிரான்ஸின் தனி சீன எதிர்ப்பு என காட்சிகள் மாறும்பொழுது பல நாடுகளின் எதிர்ப்பை இலங்கை சம்பாதித்தது
இப்பொழுது அங்கு நடக்கும் கொந்தளிப்பு அரசுக்கு எதிரான மக்களின் போராட்டமாக உலகுக்கு தெரிந்தாலும் ராஜதந்திர மொழியில் "சீனாவிடம் சேராதே என்றால் கேட்டியா? அடிவாங்கு நல்லா வாங்கு.." என்பதே பொருள்
அப்படித்தான் நடக்கும், அங்கு ராஜபக்சே அல்ல அந்த ஜெயவர்த்தன இருந்திருந்தாலும் இதுதான் நடக்கும்
இலங்கையின் அமைவிடம் முக்கியமானது, இதனால் உலக அரசியலின் தாக்கம் அடிக்கடி விழும் , இப்பொழுது அதுதான் விழுகின்றது
அதற்கு "மத நல்லிணக்கம்" "இன வெறி" "மதவெறி" என சாயம் பூசினால் அதெல்லாம் காரணமே அல்ல
உக்ரைனும் ரஷ்யாவும் ஒரே இனம் ஒரே மொழிகுடும்பம், என்ன வெறியில் மோதுகின்றார்கள் என்றால் இவர்களிடம் பதிலே வராது
சீனாவும் தைவானும் ஒரே இனம், ஏன் முறுகுகின்றார்கள்?
அட இரு கொரியாக்களும் ஒரே இனம் ஒரே மொழி ஆனால் ஏன் சேரவில்லை என்றால் சுத்தமாக பதில் வராது
இரு பாகிஸ்தானியரும் இஸ்லாமியர்கள் ஒன்றாகத்தான் தனிநாடு அடைந்தார்கள் பின் ஏன் 1971ல் மோதி கொண்டு பிரிந்தார்கள்?
இந்த "நல்லிணக்க" கும்பலெல்லாம் முகமூடிகள், இந்துமத எதிரிகள் அன்றி வேறு யாருமே அல்ல.
No comments:
Post a Comment