Tuesday, May 10, 2022

முக்கிய புள்ளிகளின் சிபாரிசு வேண்டி மதுரை தி.மு.க., நிர்வாகிகள் சென்னையில் முகாம்!

 மதுரை வட்ட செயலாளர் பதவிகளை கைப்பற்றுவதற்காக மதுரை தி.மு.க., நிர்வாகிகள் முக்கிய புள்ளிகளின் சிபாரிசு வேண்டி சென்னையில் முகாமிட்டுள்ளனர்.


மதுரை தி.மு.க.,வின் நான்கு மாவட்டங்களுக்குவட்டச் செயலாளர் பதவிகள் தேர்வு முடிந்து பட்டியல் கட்சித் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தலைமை வெளியிடும் முன்பாக பட்டியலில் உள்ள பலரது பெயர்கள் நிர்வாகிகளிடையே கசிந்து விட்டது.இதனால் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாக, கட்சி, தி.மு.க., குடும்ப முக்கிய புள்ளிகள் மூலம் பதவியை தக்கவைக்க மதுரை நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில் நகர் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் சீனியர்கள் பலரின் பதவி பறிபோயுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


latest tamil news



நகர் வடக்கு செயலாளர் பொன்முத்துராமலிங்கம் கூறியதாவது: தலைமை அறிவித்த பார்வையாளர்கள் முன்னிலையில் வட்டச் செயலாளர் தேர்தல் முறைப்படி நடந்தது. பதவி கிடைக்காததால் இருவர் தற்கொலை முயற்சி செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்து விசாரிக்கும் படி மாவட்ட செயலாளர்கள் கேட்டுள்ளோம். செயல்படாத சீனியர்கள் சிலருக்குபதில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பட்டியல் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பில்லை, என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...