இங்க பாருங்க தம்பி, சில நாட்களாக
இலங்கை போல இந்தியாவும் கடனில் சிக்கி மூழ்கி போகும் என இவிங்களும்,
ராஜபட்சே குடும்பம் மாதிரி இங்கேயும் ஸ்டாலின் குடும்பம் சீரழியும் என அவிங்களும் மாறி மாறி பதிவு போட்டுகிட்டு சந்தோசமாக சிலர்
இருக்காங்க.
மோடி வீழ்வதால், ஸ்டாலின் கெட்டு போவதால் நமக்கு என்ன நன்மை நடக்க போகிறது..?
அப்படி ஒரு சூழல் வந்தால் அவர்களுக்கு முன்பே நம் நிலைமை என்ன ஆகும் என யோசித்து பார்க்க அவர்களுக்கு நேரம் இல்லை போல.
நம்ம வாழ்க்கை நாசமாக போன பின்தான் அவர்களுக்கு பாதிப்பு வரும்.
ஸ்டாலின் ஆட்சி செய்வது நமக்கு பிடிக்காமல் போகலாம். அது வேற.
அதோடு,
அவர்களிடம் கணக்கில் இல்லாத அளவு சொத்து இருக்கிறது. உலகில் எங்க போனாலும் வாழ்வார்கள்.
ஆனால் நாம...?
சோத்துக்கும் பாலுக்கும் சிங்கி அடித்து சாக வேண்டியதுதான்.
அதோடு தாய்மண் சீரழிய வேண்டும் என நினைப்பவன் எப்படி நல்ல குடிமகன் ஆக இருக்க முடியும்...?
அதோடு இந்தியாவில் நீ வாழ என்ன குறை ?
உலகின் எந்த நாட்டில் கிடைக்கும் பொருளும் இங்கே கிடைக்கிறது.
130 கோடி பேரை ஒரே நாட்டில் வைத்து ஆட்சி செய்வது சாதாரண காரியமா..?
சீனாவை போல கடும் சட்டங்கள் இங்கே இல்லை. இருந்தும் இங்கே மக்கள் கட்டுப்பாடாக வாழ்கிறார்கள்.
இந்த ஒற்றுமையை கண்டு உலகில் வியக்காத நாடு இல்லை.
உனக்கு பிடிக்க வில்லையா..
உன் வாக்கை மாற்றி போடு.
அவர்களுக்கு வோட்டு போடாதே.. என இன்னும் நாலு பேரிடம் பிரச்சாரம் செய்து மாற்றத்தை உண்டாக்கு.
அதை விட்டு விட்டு இந்தியா சீரழிய வேண்டும் என நினைப்பது எல்லாம் பைத்த்தியம் பிடித்த நிலையின் உச்சம்.
உன்னை போல இன்னும் பல பல கோடி மக்களை பார்த்து விட்டாள் என் பாரத தாய்.
அதனால் எதையும் / எதுவும் / யாரும் கெட்டு போக வேண்டும் என நினைக்காதே.
இலங்கை நிலை நமக்கும் வந்து விட கூடாது என இறைவனை வேண்டு.....

No comments:
Post a Comment