Wednesday, May 11, 2022

ஷவர்மா உண்மையாளேமே டேஸ்ட்டா இருக்கா ? இல்ல யா ???

 *விரிவாக பார்ப்போம்*

அப்பறம் ஏன் நாம அத வாங்கி திங்கரோம் ? ..
அது ஒரு பேசன் ஆகிருச்சு..
கும்பல் மனப்பான்மை .
ஷவர்மா சாப்டரன்னு போஸ்ட் போடரது நாகரிகத்தின் வளர்ச்சியா பார்க்கப் படுது..
பீட்ஷாக்கு அப்பறம் கார்ப்ரேட் ஆள உருவாக்கப்பட்ட இன்னொரு மாபெரும் மோசடி உணவு ஷவர்மா ..
இந்தியால ஷவர்மா ஒரு விசம்.. எப்டின்னு பாப்போம் வாங்க..
கல்ப் கன்றீஸ்ல ஷவர்மா பல நூறு ஆண்டுகளா இருக்கு..
அங்கதான் உருவாச்சு..
எந்த ஒரு கறியையும் நேரடியா தீயில வாட்டி திங்கரது ஆதிகாலம் தொட்டே இருக்கு..
சேப்டியான விசியமும் அதான்..
ஆனா ஷவர்மாவும் , கிரில் சிக்கனும் மட்டும் ஏன் விசமாகிப் போச்சு..?
ஏன்னு தெரிமா..
மேரினேட் பண்றப்ப ஏற்படும் தவறுதான்.
சவுதி மாதிரியான கல்ப் நாடுக்கள்ள உணவு பாதுகாப்பு சம்பந்தமான கெடுபிடிகள் அதிகம்..
அந்த கறிய சுத்தமா கழுவுவாங்க..
சும்மா வெறும் தண்ணீல இல்ல ,
புட் சானிடைஸ் தண்ணீல..
அப்பறம் கூட சேர்க்கும் மசாலா பொருள்களும் A1 குவாலிட்டில ,
புட் கலர்ஸ் சேர்க்காம இருக்கும்..
மேரினேட் ங்கிரது கறியோட மசாலா சேத்து ஒரு நாள் முழுசும் ஊற வைக்கிரது..
12 மணி நேரத்துக்கு கமியா ஊற வச்சா ஷவர்மா டேஸ்ட் இருக்காது..
பாரின்ல மசாலா கலந்து ரூம் டெம்ப்ரேச்சர்ல வைக்க மாட்டாங்க..
அதுக்குன்னு தனியா பிரீசர்ஸ் இருக்கும்..
வெளிக்காத்து படாம , வைரஸ்கள் உருவாகாம இருக்கும்..
அதுக்கப்பறம் வேக வைக்கிர முறைதாம் இதுல முக்கியமான ஒன்னு..
அதாவது ஷவர்மா நேரடியான தீ ஜூவாலைல படாம அதோட அனல்லதான் வேகுது..
( கிரில் சிக்கன் மேத்தேடுதான்.
ஆனா கிரில் சிக்கன் ஒரு அடைச்ச கண்ணாடி ரூமுக்குள்ள வேகுது.
அனல் உள்ளுக்குள்ளயே இருக்கும்..
அதுலயும் பாதி கிருமிகள் அழியாது..
நல்லா ஆக்டிவேட் ஆகி இன்னும் வயித்துக்குள்ளபோய் நல்லா பெருகும் )
ஓப்பன்ல , வெறும் அனல்ல எந்த கறியாவது முழுசா வேகுமா ?
நல்லா யோசிச்சுப் பாருங்க ,
இன்னிக்கு தெருவுக்குத் தெரு டாடா ஏஸ் வண்டில ஷவர்மா விக்கிராங்க..
எவ்வளவு ஓப்ப்ன் ப்ளேஸ் , காத்து எப்பிடி அடிக்குது , கறி வேகுமா ?
வேகவே வேவாது ,
பாதி பச்சையாதான் இருக்கும். .
தூக்கலான மசாலா வாசன நம்மள அத கண்டுபுடிக்க விடாம செஞ்சுருது..
ஷவர்மால ஊத்திப் புரட்டித் தர மயோனிஸ் இருக்குல்ல..
அது இன்னொரு விசம்..
அத அப்பறம் சொல்ரேன்..
அதாவது பிராய்லர் கறிய பேருக்கு சுத்தம் பண்ணி ,
குவாலிட்டி இல்லாத மசாலா சேத்தி ,
சாய கலர அள்ளி தெளிச்சு கறிய ஊர வச்சி பிரிட்ல வைக்காம சும்மா 6 அல்லது 7 மணி நேரம் ஓப்பன்ல ஊற வச்சி ,
அத வெறும் அனல்ல வெந்தும் வேகாம சாப்ட்டா சாவுதான் வரும்..
இல்லன்னா புட் பாய்சன் ஆகி காலத்துக்கும் வயிறு கேன்சர் வரும்..
கிளைமேக்ஸ் சாவுதான்..
ஒன்னு கறிய குழம்பு மாதிரி வேகவைச்சு சாப்டுங்க ,
இல்ல எண்ணைல பொறிச்சு சில்லியா சாப்டுங்க..
இது ரெண்டுமே 100 டிகிரி செல்சியஸ்ல கொதிக்கிர மெத்தேட்..
கிருமிக இருந்தாலும் சாவும்.. உணவு பாதுகாப்பானது..
பிராய்லர் வளர ஹார்மோன் ஊசிகள் போடராங்கன்னு உங்களுக்கே தெரியும்..
அது 100 டிகிரி செல்யஸ்ல கொதிக்க வைக்கிரப்பவே பாதி அழியிரது இல்ல..
வெறும் அனல்ல என்ன அழியப் போவுது ,
அதுக்குள்ள இருக்கிர கெமிக்கல்லாம் நல்லா ஆக்டிவேட் ஆகி உடம்பதான் கெடுக்கும்..
முக்கியமான இன்னொன்னு , மயோனிஸ் , ஷவர்மாவ இதுலதான் கலக்குவாங்க..
இது முட்டையோட வெள்ளை கருவ மட்டும் எடுத்து ,
மிக்ஸில நல்லா அறைச்சு பூண்டும் ,
இஞ்சி உப்பு சேத்தா போதும். செஞ்சர்லாம்..
ஆனா ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது.
கெட்டுப் போயிரும்..
5 மணி நேரம் கெடாம இருக்கனும்னா பிரசர்வேட்டீவ்ஸ் சேர்க்கனும். ..
அஜினமோட்டோ சேர்க்கனும் ,
சோடியம் பாஸ்பேட் சேர்க்கனும்..
நல்லா பாத்துக்குங்க..
நீங்க சாப்ட்ரது ஷவர்மா + மயோனிஸ் மட்டும் இல்ல..
ஏகப்பட்ட கெமிக்கல்ஸ் , ஆக்டிவேட் ஆன வைரஸ் , ஒவ்வாமை பாக்டிரியாஸ் எல்லாம் சேத்திதான்..
புரிஞ்சுக்குங்க..
நாக்குக்கு ருசி மட்டுந்தா வேனும்னா இளமைலயே அத்தனை நோய்களும் வரத்தான் செய்யும்..
தயவு செய்து குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு ஷவர்மா , கிரில் சிக்கன் கொடுக்கவே கொடுக்காதீங்க..
சுத்தமில்லாத உணவு ஷவர்மா..
அப்பறம் உங்க இஸ்டம்..
😏😏😏😏😏😏😏
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...