Monday, May 9, 2022

பிறவா வரம் வேண்டும் என்று வரம் கேட்பேன்..........

 பிறவா வரம் வேண்டும் என்று அவர்களுக்கு மட்டுமில்லை ஆன்மீகத்தில் இருப்பவர்களில் பலபேருக்கு அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் ஆசைப்படும் அனைவர்க்கும் அந்த வரம் கிடைத்து விடுமா சற்று விரிவாக பார்க்கலாம்.

இறைவன் நம்மிடம் என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்று சொன்னால் நாம் கேட்கும் வரத்தை நமக்கு கொடுத்து விடுவார். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த வரம் நமக்கு கிடைத்த பின் அந்த வரத்தின் தகுதிற்கு ஏற்றார் போல் நம்மால் வாழ முடியுமா சற்று புரியும்படி சொல்கிறேன்.
இறைவனிடம் தான் ஆசைப்பட்ட வரத்தை பெற்றுக்கொண்டு பிறகு அந்த வரத்தினால் அல்லல்பட்ட பல முனிவர்களை பற்றி நாம் பல கதைகளில் படித்து இருக்கிறோம்.
அதுபோல் இறைவனிடம் என்ன வரம் கேட்க வேண்டும் என்று தெரியாமல் நாம் ஆசைப்பட்ட வரத்தை கேட்டு அந்த வரம் நமக்கு கிடைத்து பிறகு அந்த வரத்தை நம்மால் அனுபவிக்க தெரியுமா அல்லது அனுபவிக்க முடியுமா என்று நினைத்து பார்க்க வேண்டும்.
EX . விமானம் வேண்டும் என்று கேட்டால் கொடுத்து விடுவார். ஆனால் நமக்கு விமானம் ஓட்ட தெரியுமா என்று பார்க்க வேண்டும். விமானம் ஓட்ட கற்றுக்கொண்ட பிறகு விமானம் கேட்டால் பரவாயில்லை. ஓட்ட தெரியாமல் விமானம் கிடைத்து என்ன பயன் அதுபோல் தான் வரமும்
பிறவா வரம் கிடைக்க நாம் என்ன தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் பார்க்கலாம். பிறவா வரம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பிறவியோடு நம்முடைய கர்மாவை முடித்து விட வேண்டும். எந்த புதிய கர்மாக்களையும் வளர்த்து கொள்ள கூடாது. இந்த பிறவியில் நாம் தூய்மையாக வேண்டும். அனைத்து நற்குணங்கள் நிறைந்தவராக ஆக வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு மாற வேண்டும். அனைத்து ஆசைகளையும் விட்டுவிட வேண்டும். கோபம், அகங்காரம், பேராசை, சுயநலம், காமம், எதிர்பார்ப்பு, மோகம், பற்று, இவற்றை அடியோடு விட வேண்டும். இவையெல்லாம் விட்டுவிட்டால் வரம் கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தானாகவே நமக்கு அடுத்து பிறவி இருக்காது. பிறவா நிலையை அடைந்து விடுவோம்.
இந்த பிறவியோடு போதும் அடுத்து பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள் இன்று முதல் அடுத்த 100 நாட்களுக்கு பிறவா நிலைக்கான தகுதியை கடைபிடிக்க முயற்சி பண்ணுங்கள். 100 நாட்கள் உங்களால் கடைபிடிக்க முடிந்தால் அந்த பழக்கமே இந்த பிறவி முழுவதும் உங்களோடு இருக்கும். இந்த பிறவி முழுவதும் இருந்தால் இந்த பிறவியோடு உங்களின் அனைத்து கர்மாக்களும் கரைந்து விடும். இன்று நீங்கள் கேட்ட பிறவா வரத்தை இறைவன் உங்களுக்கு கொடுத்து விட்டார் என்று நினைத்து அதற்கான தகுதியை வளர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
துக்கமாக இருக்கும்போது இனி பிறவி வேண்டாம் என்று நினைப்பதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது மீண்டும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க இன்னொரு பிறவி வேண்டும் என்று நினைப்பதும் மனித இயல்பு.
இவற்றில் இருந்து கடந்து மகிழ்ச்சியோ, துக்கமோ எது நடந்தாலும் இந்த பிறவியே போதும் அடுத்த பிறவி வேண்டாம் என்று நினைக்க வேண்டும். அப்பொழுது தான் அதற்கான முயற்சியை நாம் கடைபிடிக்க முடியும்.
நீங்கள் என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள் இறைவன் வரம் கொடுப்பார். ஆனால் அதற்கு முன்பு அதற்கான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அந்த வரமும் நமக்கான வரமாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...