Saturday, May 7, 2022

வேண்டும் மீண்டும் ஒரு மக்கள் ஜனாதிபதி!

  தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிகிறது. பெரும்பாலும், மத்திய அரசு கைகாட்டும் நபர்களே, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிப்பர்.



latest tamil news



பிரதமராக இந்திரா பதவியேற்றது முதல் ஜனாதிபதி பதவிக்கு, முழுமையாக அரசியல் சாயம் பூசப்பட்ட காங்கிரஸ் தலைவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். உதாரணமாக, வி.வி.கிரி, பக்ருதீன் அலி அகமது, நீலம் சஞ்சீவி ரெட்டி, ஜெயில் சிங், ஆர்.வெங்கட்ராமன், சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் மற்றும் பிரதிபா பாட்டீல் போன்றோர் ஜனாதிபதியாகஇருந்ததை சொல்லலாம். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் தான், அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவியலாளரான அப்துல் கலாம், 2002ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த மனிதருள் மாணிக்கம் அப்துல் கலாம், ஜனாதிபதியாக பதவி வகித்த ஐந்தாண்டு காலத்தை, பொற்காலம் என்றே சொல்லலாம். அதுவரை, ஜனாதிபதி பதவி ஒரு அலங்கார பதவியாகவும், ஜனாதிபதிகள் மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாகவும் தான் இருந்து வந்தனர்.

ஒரு ஜனாதிபதி, அந்த பதவியிலிருந்து என்னென்ன செய்யலாம்... என்னென்ன செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் எளிமையின் நாயகன் அப்துல் கலாம். அவர் பற்ற வைத்த நெருப்பு தான், இன்று வரை நம் இளைய சமுதாயத்தினரின் அடி மனதில் தீயாக கனன்று கொண்டிருக்கிறது.

அவருக்கு பின், காங்கிரஸ் தலைமையால் அடையாளம் காணப்பட்ட பிரதிபா பாட்டீல், ஒரு ஜனாதிபதி எப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்தார். இதையடுத்து, ஜனாதிபதிகளாக அமர்ந்த பிரணாப் முகர்ஜி மற்றும் தற்போது பதவியில் உள்ள ராம்நாத் கோவிந்த் இருவரும் அரசியல்வாதிகள் தான்.


latest tamil news


விரைவில், மாநில சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்களும், பார்லிமென்டின் இரு சபை எம்.பி.,க்களும் சேர்ந்து தேர்வு செய்ய உள்ள, நாட்டின், 15வது ஜனாதிபதி, நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, எந்த ஒரு அரசியல் சாயமும் பூசப்படாத நபராக இருக்க வேண்டும் என்பதே, ஒவ்வொரு நடுநிலையாளர்களின் விருப்பம்.

மோடி நினைத்தால், அப்துல் கலாம் போன்ற ஒரு அப்பழுக்கற்ற, எதிர்க்கட்சிகள் கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாத நபரை அடையாளம் காண முடியும்; அவரை நாட்டின் முதல் குடிமகனாக பதவியில் அமர்த்த முடியும் என்பதில் சந்தேகமில்லை. மக்களின் இந்த விருப்பத்தை, மோடி நிறைவேற்றுவார் என நம்புவோமாக!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...