அப்போது தான்
வயதுக்கு வந்த மகளின் முதலிரண்டு
மாதவிடாய் காலங்களில் அவளின்தாயை விட அவரின் தந்தையின் அன்பு அதிகமாக இருக்கும்.
இரவு நேரத்தில் மகளிடமிருந்து
இருமல் சத்தம் வந்தாலே
பதறி எழுந்து பக்கத்தில் அமர்ந்து
ஆதரவாய் அருகிலிருப்பது முதலில்
தந்தையாக தான் இருக்கும்.
வரும் நேரம் கொஞ்சம் தாமதமானாலும்
என்ன ஆயிற்றோ என் மகளுக்கு என்று
அம்மாவின் புலம்பல் சத்தத்துக்கிடையே
அப்பாவின் உள் தவிப்பு தான் அதிகமாக இருக்கும்.
எந்தவொரு கஷ்டமும் அவளுக்கு காட்டாமல்
தன் மனதுக்குள்ளே பல ஆசைகளை புதைத்து
அவள் கேட்பதை எல்லாம் செய்து
இளவரசியாய் வாழ வைப்பது
தந்தை தான்.
சரி விடு சின்ன பொண்ணு தானே
அவளுக்கென்ன தெரியும் என்று
தன் மனைவியிடம் அவளுக்காக
பரிந்து பேசுபவர் தந்தை.
அப்பா இருக்கேன்ம்மா ஏன் கவலை படறே இந்த வார்த்தைகளை யார் சொன்னாலும் ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கை தராது.
அப்படி முழுதாக நம்பிக்கை அளிப்பவர்
அப்பா.
இப்படி எல்லாமே பார்த்து பார்த்து
தன் மகளை மதிப்பாய் வைத்திருக்கும்
ஆண்களே..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விஷயத்திலும்
கண்ணும் கருத்தாய்
தன் ரத்தத்திலிருந்து வந்த சொந்தத்தை பார்க்கும் தந்தைகளே..
என் கேள்வியென்னவென்றால்
மகளிடம் காட்டிய அக்கறையை
மகளிடம் காட்டிய பரிவை
மகளிடம் காட்டிய உணர்வை
அப்படியே அச்சு பிசகாமல்
மனைவியிடம் காட்டினால் என்ன என்பது தான்
அவளும் இன்னொருத்தவரின் மகள் தானே..
Thanks sri

No comments:
Post a Comment