தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன்: 'நடிகர் விஜய் படத்திற்கு அவ்வளவு வசூலாச்சு... அஜித் படத்திற்கு இவ்வளவு வசூலாச்சு...'ன்னு, சினிமாவுல மட்டும் தான், 'எங்க லாபம் இவ்வளவு'ன்னு சொல்றாங்க. அதனால தான், அரசிடம் இருந்து, சினிமா துறையினருக்கு எந்த சலுகைகளும் கிடைக்காமல் போகுது. திரைப்படங்களின் வசூல் தொடர்பாக வெளியாகும் செய்தி களில், எவ்வித உண்மையும் கிடையாது. சினிமாவுல, 40 வருஷமா இருக்கேன்.ஒரு படத்தோட மதுரை வசூல் எவ்வளவு, திருச்சி, சேலம், சென்னை வசூல் எவ்வளவு என்று, எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.வசூலின் உண்மை நிலவரம் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்; மற்றவர்கள் சொல்வது எல்லாம் யூகங்களே.சமீபத்தில் வெளியாகி, 'ஹிட்'டான படம் அது... அந்தப் படத்தோட விழாவில் கலந்துக்க வேண்டும் என்று, ஹீரோவை கேட்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அதற்கு ஹீரோ, 'நான் நடித்த இந்தப் படம், 100 கோடி கலெக் ஷனை தாண்டி யிருக்குதுன்னு விளம்பரம் கொடுங்க; விழாவுக்கு வந்துடுறேன்'னு சொல்லியிருக்கார். அதைக் கேட்ட தயாரிப்பாளர், 'அப்படி விளம்பரம் கொடுக்க முடியாதுங்க... மொத்தமே, 71 கோடி தான் கலெக் ஷன் ஆகியிருக்கு. வேணும்னா, 71 கோடி வசூல்ன்னு போடுவேன்'னு சொல்லவும், 'விழாவுக்கு வரமாட்டேன்'னு ஹீரோ சொல்லிட்டார்.'நீங்க வரலைன்னாலும் பரவாயில்லை; விழாவை கொண்டாடுவேன்'னு விழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார், அந்த தயாரிப்பாளர். இதைப்பற்றி, அவர் என்கிட்ட பேசுறப்ப, 'நான் பொய் சொல்ல விரும்பவில்லை. ஏன்னா, 7௧ கோடி வசூலுக்கு வரி கட்ட வேண்டியிருக்கு; தியேட்டர்கள் பங்கு, வினியோகஸ்தர்கள் பங்கு எல்லாம் போக, எனக்கு சிறிய தொகை தான் கைக்கு வரும். 'இந்தப் படம் எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே லாபம் தான்; ஆனா, இல்லாத ஒரு வசூலை சொல்ல விரும்பலை'ன்னு சொன்னார்.இன்னும் சில தயாரிப்பாளர்கள், 'இந்தப் படம் பிரமாண்ட வெற்றி... மாபெரும் வெற்றி'ன்னு சொல்வாங்க. 50 கோடி வசூலை, 150 கோடி ரூபாய் வசூல்னு பேப்பர்ல விளம்பரம் கொடுப்பாங்க.இதெல்லாமே வெறும் பெருமைக்கு செய்றது தான். இது, நடிகர்களின் சம்பள உயர்வுக்கு உதவுமே தவிர, வேற யாருக்கும் பயனில்லை. இந்த தப்பான காரியத்தால், 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கின நடிகர்கள், தற்போது 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிற அளவுக்கு நிலைமை மாறியிருக்கு.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment