எனக்கும் பிரதமர் மோடிக்குமான நெருக்கம் இன்று நேற்றல்ல, 2014ல் இருந்தே தொடர்கிறது. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு, பிரதமர் மோடியை அழைத்து கவுரப்படுத்தி இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்கும் நபர்களில் நானும் ஒருவன். காந்தி போலவே தேசபக்தராக மோடி இருப்பதால் தான், காந்தியுடன் மோடியை ஒப்பிட்டுச் சொன்னேன். நீட் மற்றும் புதிய கல்விக்கொள்கையை நான் முழுமையாக ஏற்கிறேன். தமிழக அரசியல்வாதிகள் நீட் என்ற இலியூஷனைக் காட்டி மாணவர்களை ஏமாற்றி வருகிறார்கள். அரசு இதில் என்ன செய்ய வேண்டுமோ அதை விடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்குகிறது. நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் அவராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இது. நீட்டை வைத்து இரண்டுத் தேர்தலையே சந்தித்துவிட்டார்கள். மக்களை தவறானப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். இந்தி படிப்பதால் தமிழ் அழிந்துவிடப்போவதில்லை. முதலில் தாய்மொழி, அடுத்து இணைப்பு மொழியாக ஆங்கிலம். மூன்றாவதாக கூடுதலாக இந்தியோ இன்ன பிற மொழியோ கற்றுக்கொள்வது சிறந்தது. நான் சொல்வதைப்போல் ஏதாவதொரு மொழியை கூடுதலாகப் படிக்கச் சொல்கிறது புதிய கல்விக்கொள்கை. வாழ்க்கையே போட்டிதான். போட்டிக்குத் தயாராவதற்குத் தரமான கல்வி அவசியம். அதனைக் கொடுக்கிறது இந்தக் கொள்கை. விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்கள் சிறுவயதிலிருந்தே அதற்கான முயற்சியில் இறங்குவதுபோல, அடிப்படையிலிருந்தே தரமானக் கல்வியைக் கொடுக்கிறது புதிய கல்விக்கொள்கை. 3, 5, 8 வகுப்புகளிலும் பொதுத்தேர்வு எழுதுவதில் என்ன சிரமம் வந்துவிடப்போகிறது? வினாத்தாள் வெளியிலிருந்து வரும் என்றாலும், படிக்கும் பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது: திரு. டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், ஐ.ஜே.கே தலைவர் .
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment