*பூஜையின் போது சாம்பிராணி ஏன்?*
பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.
இன்று சாம்பிராணியை பெரும்பாலும் எல்லோராலும் உபயோகப்படுத்த முடிவதில்லை. எனவே, பாரம்பரியமான சாம்பிராணிக்குப் பதிலாக, இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் விதவிதமான ஊதுபத்திகள் மூலம் தூப ஆராதனையை இறைவனுக்குச் செய்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது ஒரு சம்பவம்.
இறைவனுக்கு எந்தப் புகையும்பூவும் சமர்ப்பிக்கலாம். செதுகையிட்டுப் புகைக்கலாம், கண்டகாலிப் பூவும் சூட்டலாம் என்று உரை அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடரான நஞ்சீயருக்கு வருத்தம் ஏற்பட்டது. *""இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாத்திரம் வகுத்திருக்கும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா?''* என்று கேட்டுவிட்டார்.
அதற்கு பட்டர், *"இறைவன் ஒன்றும் எனக்கு இதைத்தான் நீசூட்ட வேண்டும், காட்டவேண்டும் என்று விதிக்கவில்லை... கண்டகாலிப்பூ சாத்துவதற்காகப் பறிக்கப்போனால், அதில்உள்ள முட்கள் பக்தனின் கையைப் பதம்பார்த்து விடும். எனவே அடியார்கள் மீது கருணைகொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தானே ஒழிய இறைவனுக்குவிருப்பமானது விருப்பமில்லாதது என்றுஎதுவும் இல்லை''* என்று விளக்கம் அளித்தார்.
* நன்றி
*
No comments:
Post a Comment