Thursday, May 5, 2022

எவனாவது இயற்க்கை உணவகம் ஆர்கானிக் காய்கறிகள் என்றால் நம்பாதீங்க..

 உங்க மண்டய கழுவி உங்க காச ஆட்டைய போடும் கூட்டம் அது..

அந்தக்காலத்துல நாம எல்லாரும் சாப்பிட்ட மிக சாதரண உணவுகளை இந்தக்காலத்தில் ஆர்கானிக் உடலுக்கு நலம் என மஞ்சள் தேச்சு பணக்கார உணவுகளில் சேர்த்துவிட்டார்கள்...!
சின்ன உதாரணம் திருச்சியில் ஒரு உணவகம்..அம்மிகல் ஆட்டுகல்லில் ஆட்டுகிறோம் மண்பானையில் உணவுகளை தரும் உணவகம் உடலுக்கு நலம் என இணையங்களில் யூட்யூப்களில் வியூ வருவதற்க்காக அள்ளி விடறானுங்க..நாம வெளியே நல்ல தரமான உணவகத்தில் 100 ரூ உண்ணும் மதிய உணவு இங்க 250 ரூ ..சாதம் மறுக்கா வாங்குனாலும் சரி மோர் வாங்கினாலும் சரி தனி பணம்...கிட்ட தட்ட நம்மை ஏமாற்றும் வேலை இது.
இதே போல ஆர்கானிக் ஆடு கோழி கறியாம்...
எப்படின்னா ஆட்டுக்கும் கோழிக்கும் ஆர்கானிக் தீவனம் மட்டுமே தர்றதால அதனுடைய மாமிசமும் ஆர்கானிக் மாமிசமாம்....
ஆர்கானிக் ஐஸ்கிரீமாம்..என்னடான்னா.
ஐஸ்கிரீம் செய்யற பால் ஆர்கானிக் பால்னு ஜெர்சி மாட்டை காமிக்குறானுங்க..
இதே போல நாட்டு ரக அரிசிகளை காப்போம்னு பெரிய விளம்பரம் வரும்..இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள்,பூங்கார், காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா, கவுனி, கட்டைச் சம்பா கிடைக்கும் இவற்றை காப்போம் வாங்குங்க என வந்த தகவலை வாங்க போனா,நாம உபயோகபடுத்தும் அரிசி ரகங்கள் ஓரு கிலோ விலையை விட அதிக விலை கொடுத்து தான் வாங்க இயலும்..
சார் இது உபயோகம் கம்மி எனவே விலை கூடுதல் என்றால் நீங்க குறைந்த விலையில் சரியான விலையில் தந்தால் தானே அதிகம் புழக்கத்தில் வரும்..
நாம் இங்கே குறிப்பிட்டது சின்ன சாம்பிள்.இது தவிர ஆர்கானிக் பழங்கள் காய்கறிகள் என அது ஒரு தனி மோசடி...
பாரம்பரிய உணவு பொருட்கள் காப்போம் ஆர்கானிக் உடலுக்கு நலம் என கிளம்புவது எல்லாம் வியாபாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவை..
தெளிவா இருங்க மக்களே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...