Thursday, May 5, 2022

சுமக்க தடை போடுங்கள்.

 ஊழலை சுமக்க தடை போடுங்கள்,

லஞ்சத்தை சுமக்க தடை போடுங்கள்,
சாராயக்கடையை சுமக்க தடை போடுங்கள்.
🌎மனிதரை மனிதர் சுமப்பது இயற்கை நியதி. மனிதர் சுமக்காமல் எந்த மனிதரும் பிறப்பதும் இல்லை. வளர்வதும் இல்லை. இறப்பதும் இல்லை. பிறக்கும் போது தாய் சுமக்கிறாள். வளரும் போது தாய் தந்தை மற்றும் பலர் சுமக்கின்றனர். இறக்கும் போதும் குறைந்த பட்சம் நான்கு பேர் சுமக்கின்றனர்.
.பல்லக்கும் பல்லக்கைச் சுமப்பதும் யாவும் கடந்த மெய்க் கடவுளான பரமேஸ்வரனது அங்கீகாரம் பெற்றவை. மூன்று வயது திரு ஞான சம்பந்தரைத் தோடும் குழையும் அணியும் இருபால் அலிப் பெருமானாய் நந்தி மேல் வந்து பசும்பால் சாதம் ஊட்டி ஆட்கொண்ட பரமன் அவருக்கு முத்துப் பல்லக்கை அருளிச் செய்தார். அதைத் திருநாவுக்கரசர் உட்படப் பல அடியார்கள் சிந்தை களிப்புடன் சுமந்து தெய்வீகமும் ஆனந்தமும் அடைந்தனர். கல்யாணம் முடிந்ததும் மணமகள் பல்லக்கில் கணவன் வீடு புகுவது மரபாக இருந்தது. இன்றும் வட நாட்டுத் திருமணப் பத்திரிகைகளில் பல்லக்குப் படம் இருக்கும்.
யார் யாரைச் சுமப்பது என்பது அவரவர் தனி விருப்பம். அதில் தலையிடுவது மனித உரிமை மீறல். பல்லக்கைச் சுமப்பவர்களுக்கும் பல்லக்கில் இருப்பவர்களுக்கும் யாரும் எந்த விதமான உபதேசமும் செய்யக் கூடாது என்பதை...
☸️ அறத்தாறு இது என வேண்டா சிவிகைப் பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்று திருக்குறள் தெளிவாகத் தெரிவிக்கிறது .ஊரை எமாற்றத் திருக்குறளை வண்டியில் எழுதி வைக்காமல் வாழ்க்கையில் எழுதி வைக்க வேண்டும். பொது அறிவு கூட இல்லாத அரசுக்கு எதைத் தடை செய்வது என்ற மூளை இல்லை.
மனிதர் கள்ளைச் சுமக்கக் கூடாது, மாமிசம் சுமக்க கூடாது , ஊழல் சுமக்கக் கூடாது , கொலை மத மாற்றம் முதலிய பாவத்தைச் சுமக்கக் கூடாது என்று தடை செய்தால் நல்லது. தங்கள் தனிப்பட்ட விஷயங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் ஆதீனம் அதே போல் கடவுள் தெய்வம் கோயில் அர்ச்சகர் பூஜை மரபு பண்பாடு பழக்க வழக்கம் இந்து நெறி யாவும் தாக்கப்படும் போது மௌனமாக இல்லாமல் எல்லா மடங்களும் ஆதீனங்களும் ஆன்மீகத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் எவரும் இந்து விஷயத்தில் தலையிட மாட்டர்கள். ⚜️🚩

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...