நம் வாழ்வில் எத்தனையோ தவறவிட்டுவிட்டோம் என்ற ஆதங்கம் இன்றளவும் நம்முள்ளே இருக்க தான் செய்கிறது ..
அப்படி அதை அந்த சமயத்தில் நீங்கள்,
மிக சரியாக தவறவிட்டதால் தான் உங்கள் வாழ்வே இன்று இந்த நிலைமையில் ..
அதை தவறவிட்டோம் ?? இதை தவறிவிட்டோம் !! என்பது எல்லாமே ..
உங்களுக்கு அதில் அதற்க்கு மேலே அதில் கிடைக்க ஏதுமில்லை என்பதாலும் ..
அதற்க்கு அடுத்த நிலையில் நீங்கள் அனுபவிக்க வேண்டியது இருப்பதால்,
அதை சுமந்து கொண்டே பயணித்தால் எதையும் நீங்கள் உருப்படியாக அனுபவிக்க இயலாது என்ற இறையின் பெருங்கருணையால் தவறாது விட்டதே யாவும் ..
இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தோம் என்றால்
இன்று நீங்கள் அனுபவிப்பது எல்லாமே யாரோ தவறாது தவறவிட்டது தானே ..
அப்படியே
நீங்கள் தவறாது தவறவிட்டது மற்ற ஒருவருக்கு ..
இப்படி தான் வாழ்க்கையின் சுழற்ச்சி ..
உதாரணமாக
யாரோ தனக்கு என்று சேர்த்து அனுபவிக்காது தவறவிட்ட நிலம், சொத்து, பொன், பொருள் எல்லாமே இப்போது நீங்கள் பயணிக்கும் வழியில் இருந்து அனைத்துமாக இருக்கின்றது ..
யாரோ தவறாது தவறவிட்ட விதைகள் எல்லாம் உங்களுக்கு நிழல் தரும் மரமாக இருக்கின்றது ..
யாரோ தவறாது விட்ட இடத்தில் தான் நீங்கள் இப்போது அமர்ந்து இருப்பது கூட ..
எனவே எதையும்
தவற விட்டுவிட்டோம் என்று கலங்க வேண்டாம் !!
தவறாது விட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்று உங்களை இயக்கி ஆள்பவன் கருணையை உணருங்கள் ..
திருச்சிற்றம்பலம் .
No comments:
Post a Comment