Wednesday, May 11, 2022

மனைவியை மதிப்பதும் நேசிப்பதுமே ஆண்களின் முதல் கடமையாகட்டும்.........

 +++++++++++++++++++ நடுத்தர​ வயது ஆண்கள் மன உளைச்சலில் இருந்து விடுதலை பெற.......

கடைசியாக உங்கள் மனைவியுடன் எப்போது உட்கார்ந்து சந்தோஷமாக பேசினீர்கள் என்றால்... வெகு சிலரால் மட்டுமே மிகச்சரியாக உடனே பதில்சொல்ல இயலும்......
உங்கள் விரல்கோர்த்து கனவுகளுடன் வாழ்வை தொடங்கிய பெண்... காலம் மென்று போட்ட கரும்பு சக்கையாய் பொலிவிழந்து , கண்கள் குழிவிழுந்து எச்சமாய் நடமாடிக் கொண்டிருப்பர்...
இப்படித்தான் வாழ வேண்டுமா?? இல்லை.... குறைந்தபட்ச மாற்றங்களையாவது முயற்சிக்கலாமா......
* சமையலறை என்பது 7 அடுக்கு பாதுகாப்பு கொண்ட எதிரியின் கோட்டை அல்ல.... நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே செல்லுங்கள்.. கழுவாமல் விட்டிருக்கும் ஓரிரு பாத்திரங்களை கழுவுங்கள்.. கூட்டோ பொறியாலோ செய்யும் போது குறைந்தபட்சம் கரண்டியை வாங்கி கிளறுங்கள்...
* விடுமுறை நாட்களிலோ, பண்டிகை நாட்களிலோ அவர்களுக்கு சமையலறையில் இருந்து ஒய்வு கொடுங்கள்.. அல்லது கூட மாட ஒத்தாசை செய்யுங்கள்..
*வாரம் ஒருமுறை வேண்டாம்... மாதம் ஒருமுறையாவது "இன்னிக்கு சமைக்க வேண்டாம்.. நாம வெளியில் போகலாம்... எங்க போகலாம்ன்னு நீ சொல்லு" என்று விடுமுறையுடன் , முடிவெடுக்கும் வாய்ப்பையும் கொடுங்கள்...
* குழந்தை பிறந்தபிறகு இயல்பாகவே பெண்களின் எடை கூடும்....
அந்த எடைகூடலை கேலி செய்யாமல்.. அந்த அழகை ரசிக்க பழகுங்கள்... அவர்களின் கர்ப்பகால சங்கடங்களை நினைவு கூருங்கள்...
* அவ்வப்போது அவர்களின் தாய் வீட்டு விசேஷங்களை, நலன்களை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்..
* எல்லா செலவுகளுக்கும் உங்களை எதிர்பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை தவிர்த்து முன்கூட்டியே அவர்களிடம் செலவுக்கான பணத்தை கொடுத்து விடுங்கள்.... "கொடுத்துட்டேன்.. என் வேலை முடிந்தது" என்ற எண்ணம் தவிர்த்து , இடை இடையே கையிருப்பு இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்..
* உங்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் கேரியர் மீது அவர்கள் செய்துகொண்ட சுயசமாதானத்தை போற்றி நினைவுகூறுங்கள்..
* உங்கள் வேலை முடிந்த உடன் தூங்க செல்லாமல், உங்கள் மனைவி சமையலறை வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை அவருக்காக காத்திருந்து ஓரிரு வார்த்தைகளாவது பேசியபின் தூங்கச்செல்லுங்கள்...
* உங்க மனைவி ஒர்க் பண்றாங்களா.. என்று யாராவது கேட்டால்..."இல்லை... சும்மாதான் இருக்கிறார்" என்று சொல்லாதீர்கள்... மாறாக...." குடும்ப நிர்வாகத்தை அவர்தான் கவனிக்கிறார்" என்று சொல்லுங்கள்... இந்த அங்கீகாரமே பல போராட்டங்களுக்கான ஆறுதலும் தீர்வுமாகும்.....
* முடிந்தவரை "உனக்காக வாங்கினேன்...." என்று எதையாவது பரிசளியுங்கள்.... அவர்கள் கலர் சரியில்லை, நல்லாவே இல்லை என்றாலும் கண்டுகொள்ளாதீர்கள்.... ஏனென்றால்... அவர்களே வாங்கி வந்தாலும் கூட வீட்டிற்கு வந்த உடன் பிடிக்காமல் போவது பெண்கள் இயல்பு.... உங்கள் அன்பும் கலந்திருப்பதால்... பார்க்கப்பார்க்க அது அவர்களுக்கு பிடிக்கும்...
*முக்கியமாக, எக்காரணம் கொண்டும் மனைவியிடமோ, மனைவிக்கு முன்னாலோ வேறொரு பெண்ணை புகழ்ந்து பேசாதீர்கள்.. அது உங்கள் உடன்பிறந்த சகோதரியாவாகவே இருந்தாலும்... ஒருவேளை உங்கள் மகளை புகழவேண்டி வந்தால் "உன்னைப்போலவே.." என்று எக்ஸ்ட்ரா பிட்டிங் அவசியம்...
*ஏதேனும் விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல நேர்ந்தால்..."அன்னிக்கு அவங்க வீட்டு கல்யாணத்துக்கு போனப்போ நீ இந்த புடவை தான கட்டிட்டு வந்த..... வேற புடவை கட்டிட்டு வா.... அந்த மஞ்சள் புடவை உனக்கு நல்லா இருக்கும்.." என்பது போன்ற ஆலோசனைகள் அவசியம்.... இது நீங்கள் உங்கள் மனைவியை ரசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்...
* "ஏன் ஒரு மாதிரி இருக்க.... தலை எல்லாம் கலைஞ்சிருக்கு,, ரொம்ப டயர்டா இருக்க... உடம்பு சரி இல்லையா.." என்பது போன்று விசாரியுங்கள்... இது உங்கள் மனைவி மீதான அக்கறையை அவருக்கு உணர்த்தும்...
* இதை எல்லாம் தாண்டியதுதான் உடல் சார்ந்த தேவைகள்... முடிந்தவரை அதை ஈடு செய்ய முயற்சியுங்கள்...
அப்புறமென்ன.... வாழ்க்கை வசப்படும்...
திரும்பி பார்க்கையில் வாழ்ந்த திருப்தி கிடைக்கும்........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...