இன்றோடு இந்த படம் வந்து 31 வருடங்கள் ° ..... அதனால் இந்த பதிவு
திகட்ட திகட்ட நிறய்ய பேர் இந்த படத்த
பார்த்திருப்பிங்க ....
அதனால் கதை வேணாம்......
தமிழ் சினிமா வை புரட்டிப் போட்ட படம் இது....
எளிமையான கதை... வெறும் 35 லட்சம் தான் செலவு ...
ஆனால் வசூலோ பல கோடி
இளையராஜா வெறும் அரை மணி நேரத்தில் இசை அமைச்ச படம்...
மாங்குயிலே பூங்குயிலே......
இந்த மான் உந்தன் சொந்தமான்
குடகு மலைக் காற்றினிலே...
மாரியம்மா மாரியம்மா
ஊரு விட்டு ஊரு வந்து ..... எளிமையான
ட்யூன்கள் ... ஆனால் இன்றும் கொண்டாடப்படும் பாடல்கள்.. அதுதான்
இளையராஜா "அது
அற்புதமான இசை... இந்தப் படத்தில் இசையை எடுத்து விட்டு படம் பாருங்கள்...
படம் சுமார் ரகம்...
இந்தப் படத்தின் வெற்றிக்கு இளையராஜா பெரிய காரணம் ..
கனகா ,. அவ்வளவு அழகாக இருப்பார்
ராமராஜன் தனது கேரியரில் இப்படி ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படி ஒரு வெற்றி பெற்ற படம் கரகாட்டக்காரன் இன்றும் இந்த படத்தின் பாடல்கள் காமெடிகள் ரசிக்கப்படுகிறது
கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி எப்போதும் ரசிக்கக் கூடியது
இந்த மான் உந்தன் சொந்த மான் பாடல் இன்றும் காதலிக்க வைக்கிறது
மாங்குயிலே பூங்குயிலே எந்த கிராமிய நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் இடம்பெறக்கூடிய பாடல்
அம்மன் திருவிழாக்களில் மாரியம்மா மாரியம்மா என்ற பாட்டை கேட்கலாம்
மதுரையில் ஒரு வருடத்தை தாண்டி ஓடிய படம்
ராமராஜன் மதுரையில் தியேட்டர்கள் வாங்கியது இந்த படத்தில்தான்
கிராமங்களில் ராமராஜனை கொண்டாடியது இந்த படத்தில்தான்
மூலக்கதை தில்லானா மோகனாம்பாள் இல்லை இருந்து எடுத்தாலும் மக்கள் கரகாட்டக்காரன் கொண்டாடினாரகள.
அப்படி ஒரு பெருமை வாய்ந்த படம் இது எப்போதும் பேசப்படும் படம்
இது
நன்றி
உங்களில் ஒருவன்
No comments:
Post a Comment