IVF சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மற்றும் ஆரோக்கியமா இருக்கும் இளம் வயது பெண்கள் சிகிச்சைக்கு வரும்போது அவர்களின் கருமுட்டையை திருடி .அதனை 5 லச்சம் வரை பேரம் பேசி விற்கிறார்கள்.20 வயது பெண்ணின் கருமுட்டை என்றால் 5 லச்சம்.கருப்பான பெண்ணின் முட்டை என்றால் மலிவான விலை.
மேலும் கவுண்ட் ,மொட்டிலிட்டி கம்மியா இருக்கும் ஆண்களுக்கு அவர்கள் அனுமதி இல்லாமலே அவரை போலவே உருவ ஒற்றுமையில் இருக்கும் வேறு ஒருவரின் விந்துவை செலுத்தி சக்ஸஸ் காட்டுவது. இது மருத்துவமனையா?
இதுபோல உங்களுக்கு நடந்தால் அதை தயவு செய்து புகார் அளித்து சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியே கொண்டுவாங்க.
நீங்கள் நினைக்கலாம் இதற்கு இப்படி வீண் செலவு செய்யணும், ஒரு அநாதை குழந்தை தத்து எடுத்துக்கொள்ளலாமே என்று நீங்கள் நினைக்கலாம்.
இவங்க எனக்கு நல்ல கருமுட்டை வையுங்க என சொல்லி மருத்துவமனைக்கு போகலை..குழந்தையில்லை சிகிச்சை ஆரம்பிக்க முதலில் ஒரு பேக்கேஜ் ல போட சொல்கிறார்கள் ..ஆரம்பத்தில் கருமுட்டை வெளியில்வாங்கித்தான் கர்ப்பம் தரிக்கமுடியும் என்று சொல்லமாட்டாங்க ..முதலில் சிகிச்சை என்றே ஆரம்பிப்பார்கள் அப்படி செய்த பிறகு சிலமாத சிகிச்சைக்கு பிறகு உங்கள் கருக்குழாயில் பிரச்னை என்று கருக்குழாய் நீக்குகிறார்கள்.அதற்கு பிறகுதான் இறுதியாக கருமுட்டை வைத்து உருவாக்கி தருகிறோம் என்று சொல்றாங்க.
சரி செலவு செய்துவிட்டோம்.செய்த செலவிற்கு இப்படியாவது பெற்றுக்கொள்வோம் என்கிற நிலைக்கு தள்ள படுகிறார்கள்.
தள்ளப்படுவதால்தான் இப்படி செய்ய தோணுகிறது தவிர விருப்பப்பட்டு யாரும் செய்யவில்லை.விவரம் தெரியாமல் யார் மனதும் புண்படும்படி பேசாதீங்க.
No comments:
Post a Comment