எம்ஜிஆருக்கு ரூ.1 கோடியில் கோவில்!
வேலூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்
வெள்ளிக்கிழமை காலை பூமிபூஜையுடன் தொடங்கப்பட்டது.
எம்ஜிஆருக்கு கோவில் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரகுபதி நகர் பகுதியில் ராமச்சந்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் எம்ஜிஆர் பக்தர்கள் இணைந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு கோவில் கட்ட முடிவெடுத்தனர்
மறைந்த முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம். ஜி. ஆருக்கு பல்வேறு இடங்களில் ஆலயங்கள் அமைந்துள்ளன . எம்ஜிஆருக்கு தீவிர பக்தர்களாக இருக்கும் பலரும் ஆலயம் அமைத்து அவரை வணங்கி வருகின்றனர்...
ஆங்காங்கே பக்தர்கள் எம்ஜிஆர் ஆலயம் என்று அவரின் தீவிர பக்தர் ஒருவர் கட்டி வைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறார் . அங்கே தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான எம்ஜிஆர் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோயிலில் எம்ஜிஆருக்கு வெண்கல சிலை வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுபதி நகர் பகுதியில் ராமச்சந்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் எம்ஜிஆர் பக்தர்கள் இணைந்து எம்ஜிஆருக்கு கோவில் கட்ட முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் 80 சென்ட் நிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்றது இந்த விழா.
எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இவ்விழாவில் திரளாக பங்கேற்றுள்ளனர். இந்த கோவில் வரும் ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் இந்த கோவிலில் எம்ஜிஆரின் வெங்கல சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கோவிலுக்கு அருகே ஒரு மண்டபம் அமைக்கப்பட்டு அந்த மண்டபத்தில் ஏழை எளியோருக்கு இலவசமாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த வழங்கப்படும் என்றும் .
ஜனவரி மாதத்தில் கட்டி முடிக்கப்படும்
என தெரிவித்துள்ளனர்
திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இக்கோயில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி செலவில் கட்டப்பட உள்ள இக்கோயிலை எம்ஜிஆரின் பிறந்தநாளில் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டுவது தவறில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காட்பாடியை சேர்ந்த ஒருவர் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். எம்.ஜி.ஆருக்கென கோவில் கட்டுவது தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment