Monday, June 20, 2022

இப்படி செய்வீர்களா ஊழியர்களே?

 'பெரும்பாலான அரசு ஊழியர்கள், லஞ்சம் வாங்காமல் வேலையே செய்வதில்லை. 'பொதுமக்களுக்காக எந்த அதிகாரியும், தங்கள் பணியை சரியாக செய்வதில்லை' என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சமீபத்தில் கருத்து தெரிவித்திருப்பது, மிகவும் வேதனையான விஷயம். தமிழகத்தில், ௧௪ லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த ஊழியர்களின் சங்கங்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகளை முன்வைத்து, அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதையும் பார்க்கிறோம். நீதிமன்றங்கள் கடுமையான குற்றச்சாட்டை, விமர்சனங்களை முன்வைக்கும்போது, அரசு ஊழியர்களின்சங்கங்கள் வாய்மூடி மவுனமாக இருப்பது சரியல்ல! அத்துடன், 'நாங்கள் லஞ்சம் பெறுவதில்லை' என, எந்த ஒரு சங்கமும் நெஞ்சுயர்த்தி இதுவரை அறிவிக்காததும் வருத்தம் தருகிறது. அரசு சம்பளம் பெறும் ஒவ்வொரு ஊழியரும், இனியாவது தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில், எந்த ஒரு அரசு ஊழியரும் லஞ்சத்தில் சிக்காமல் இருப்பது மட்டுமின்றி, அரசு அலுவலர்களின் லஞ்ச லாவண்யம் அற்ற நேர்மையான பணிகளை எண்ணி, நீதிபதிகளும், பொதுமக்களும் பாராட்டும் நிலையை உருவாக்க வேண்டும். அதைச் செய்வது என, அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்களும் சபதம் ஏற்க வேண்டும். அதுவே, நீதிபதிகளுக்கு கொடுக்கின்ற சரியான பதிலடியாக இருக்கும்... செய்வரா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...