நாட்டின் மிகப்பெரிய குடும்பம், சுதந்திரப்போராட்டத்தில் முக்கியப்பங்காற்றிய ஒரு தலைவரின் குடும்பம், கிட்டத்தட்ட 53 வருடங்கள் இந்த நாட்டை ஆண்ட குடும்பத்தின் இளவரசரின் படுகொலைக்கே நியாயம் கிடைக்காத இந்த நாட்டில் ஒரு சாமானியனுக்கு என்ன நியாயம் கிடைத்துவிடப்போகிறது?-
பத்தாம் வகுப்பில் ஆவரேஜ் மதிப்பெண் பெற்றுப்பாஸாகி, +1-ல் மூன்றாவது, நான்காவது வகுப்பெடுத்துப்படித்து பிறகு சட்டக்கல்லூரியில் சேர்ந்து ரௌடியிஸம் கற்று, பத்து வருடங்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகவே வாழ்ந்து பிறகு நீதிபதிகளாக வரும் வக்கீல்கள் வழங்கும் நீதி பிறகு எப்படியிருக்கும்?-
ஒரு நீதிபதி குண்ஹா ஒருவரை குற்றவாளி என்று கூறு நான்கு வருடம் சிறைதண்டனை விதிக்கிறார், மறுநீதிபதி குமாரசாமி அதே நபரை குற்றமற்றவர் என்று கூறிவிடுவிக்கிறார், மற்றொரு நீதிபதி மீண்டும் முதல் நீதிபதியின் தீர்ப்பே சரி என்கிறார், இதில் எதுதான் உண்மையான நீதி?, இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றவாளிகள் மீண்டும் அரசமைக்கிறார்கள் எட்டுக்கோடி மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுகிறார்கள் இது எந்தவிதமான நீதி?, எந்தமாதிரியான ஜனநாயகம் -
ஒரே உச்சநீதிமன்றம்தான் ராஜீவ் கொலையாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதித்தது, அதே நீதிமன்றம்தான் பிறகு தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது, மீண்டும் அதே நீதிமன்றம்தான் அதே குற்றவாளியை விடுதலையும் செய்கிறது? இதற்கு எதற்கு நீதிமன்றங்கள், காவல்துறை, ஆயிரக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிக்கைகள், விசாரணைகள். அதிகாரிகளுக்கு வெட்டியாக கோடிக்கணக்கில் சம்பளம்? புரியவேயில்லை-
பக்கத்து நாடான பங்களாதேஷில் நான்கு வருடங்களுக்கு முன்பு பிரதமர் ஷேக் ஹசீனாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி பத்துப்பேரைத் தூக்கிலிட்டனர், கவனியுங்கள் கொலை செய்யவில்லை கொல்லவேண்டும் என்று நினைத்ததற்கே, ஆனால் நம் நாட்டில் நடப்பதென்ன?-
அதே காலகட்டத்தில் நமது பிரதமர் மோடியைக் கொள்ள சில நக்சல்கள் திட்டமிட்டதாகத் தெரிந்து நடவடிக்கை எடுத்தார்கள், உடனே இங்கே மறைந்துகிடந்த அத்தனை தீவிரவாதிகளும் அர்பன் நக்சல்களும் வெளியே வந்தார்கள், மீடியாக்கள் அலறின நாட்டில் கருத்துச்சுதந்திரம் பறிபோவதாக, எது கருத்துச்சுதந்திரம்? பிரதமரைக் கொல்ல திட்டமிடுவதா?, சிலப்பல பத்ம விருதுகள் திருப்பித்தரப்பட்டன, இறுதியில் மோடி அரசால் ஒருவரைக் கூட கைது செய்யமுடியவில்லை வெறும் வீட்டுக்காவலில் மட்டுமே வைக்க முடிந்தது -
இதில் கொடுமை என்னவென்றால் தீவிரவாதத்திற்கு தனது கட்சியின் இரண்டு பெரும் தலைவர்களைப் பறிகொடுத்த காங்கிரஸ்கட்சி அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக களம் இறங்கிப்போராடியதுதான்- (ஆனால் கொல்லப்பட்டவர் காங்கிரஸ் தலைவர் என்றாலும்கூட இன்றுவரை கொலைகாரர்களை எதிர்த்து வருபவர்கள் பா.ஜ.கவினரே)-
இப்பொழுது நேரம் வந்துவிட்டது-
நாட்டின் உட்சபச்ச அதிகாரம் இருக்கவேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளைக் கொண்ட நாடாளுமன்றத்திடமா? அல்லது கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதும் அநீதிமன்றங்களிடமா? என்று-
எனக்குச் இவர்கள் கூறும் சட்டப்பிரிவுகள் பற்றியெல்லாம் தெரியாது, ஆனால், கொடூரமான கொலைகாரர்களைக்கூட குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் விடுவிக்கும் அளவிற்கு அந்தச் சட்டப்பிரிவிற்கு வலிமை இருக்குமானால், முதலில் நீக்க வேண்டியது அதைத்தான்-
பகவான் கிருஷ்ணர் பார்தனிடம் கூறியபோல, இங்கே கொலை செய்துவிட்ட ஒருவனுக்குச் செய்யும் பரிகாரம் என்பது அவனைக் கொல்வது மட்டுமே, அதுதான் அவனது பாபத்திலிருந்து அவனை விடுவிக்கும்-
மாறாக கொலைகாரனைக் காப்பாற்றுவதென்பது அவனுக்குச் செய்யும் கெடுதலாகும் .
No comments:
Post a Comment