தி.மு.க., அரசு மீது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா மலை,ஆதாரத்துடன் சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுகளை, தார்மீக ரீதியாக எதிர்கொள்ள முடிவில்லை.'அதற்கு மாறாக, அவரதுகையை ஒடிப்பேன்; காலை ஒடிப்பேன்' என்று ஒரு அமைச்சர் பேசுவதும்,மற்றொரு அமைச்சர் மிரட்டல் விடுப்பதும், அவர்கள்
வகிக்கும் பதவிக்குமாண்பா என, முதல்வர் ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, அவர் மீது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினே, அடுக்கடுக்காக ஊழல் புகார்களை வாசித்தார். ஆனால், அதே செந்தில் பாலாஜி, தி.மு.க.,வில் இணைந்த பின், அவருக்கு அமைச்சர்பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளார். பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவரது அரசு மீது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஊழல் புகார்கள் கூறவில்லையா... அதற்காக, அப்போதைய ஆளுங் கட்சி அமைச்சர்கள், தி.மு.க., தலைவரை வன்முறையாகவும், ஆபாசமாகவும் பேசினரா? அமைச்சர்களாக பதவி வகிப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் சுமத்தும் ஊழல் புகார்களை, சட்ட ரீதியாக எதிர்கொள்வதே நாகரிகம். அதை விடுத்து, ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை, அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள், தரம் தாழ்ந்து தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதும், கொலை மிரட்டல் விடுப்பதும், சர்வாதிகாரிகளின் ஆட்சியில் கூட நடந்திராத செயல்.அமைச்சர்களின் இப்படிப்பட்ட வன்முறை பேச்சால், தி.மு.க., அரசுக்குத் தான் களங்கம் ஏற்படுமே தவிர, பா.ஜ.,விற்கு அல்ல. அதே சமயம், தி.மு.க.,வினரின் மிரட்டல்கள் தொடர தொடர, அண்ணாமலைக்கு ஆதரவு பெருகியபடியே இருக்கும். அண்ணாமலை கூறும் ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடுங்கள்; அவர் கூறுவது பொய் என்று மக்களிடம் நிரூபித்துக் காட்டுங்கள்.
அது தானே அமைச்சர்பதவி வகிப்போருக்கு அழகு. அதை விடுத்து, பேட்டை ரவுடிகள் போல அமைச்சர்கள் பேசுவது சரியல்ல. இப்படிப்பட்ட நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட வேண்டும்; இல்லையேல், அரசுக்கு தான் களங்கம் ஏற்படும்.
No comments:
Post a Comment