Tuesday, June 21, 2022

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா.

 ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட உள்ளார்.


புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18 ல் நடக்கிறது. அதில் பா.ஜ., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. இந்த தேர்தலில், சரத்பவாரை வேட்பாளராக்க முயற்சி நடந்தது. ஆனால், அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக கடந்த 15ம் தேதி டில்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, பரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இருவரும் மறுத்துவிட்டனர். அடுத்த கட்டமாக இன்று(ஜூன் 21), தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.


latest tamil news



ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அமைச்சரவையில் நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். பின்னர் 2018 ல் பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய அவர், 2021ல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அவர் அக்கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு முன்னதாக அவர், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...