Tuesday, June 21, 2022

திருமணமான பிறகு மாப்பிள்ளைக்கும், பெண்ணிற்கும் - பாலும், பழமும் கொடுப்பது வழக்கம்.

 பசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,

அது போல கணவன் வீட்டார் உனக்கு ஏதேனும்
செய்தாலும் , விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழை மரம் எப்படி மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ ,
அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க வாழைப்பழமும் தருவர்.
அதே போல் -
ஏ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ ,
அது போல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது.
பக்குவமாக,
வெண்ணையை நெய்யை எடுப்பாயாக , பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ ,
அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்.
அதை கவனித்து ,
அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள்
என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...