Friday, June 17, 2022

பழைய சம்பவம் ஒண்ணு நியாபகம் வருது!

 #2003னு நினைக்குறேன்!அப்போதைய ஜெயலலிதா ஒரு அதிரடி அறிவிப்பை அறிவிக்குறார். அனைத்து வீடுகளிலும்,அலுவலகங்களிலும் கட்டாயமாக மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கபட வேண்டும் என!

#அப்படி அமைக்காதோர் ரேஷன் அட்டைகள் ரத்து.அலுவலகங்களின் உரிமம் ரத்து.
#கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ஜெயலலிதா அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்!
#ஜெயலலிதா சொன்னால் செய்வார் என பயந்த மக்கள் பெரும்பாலானோர் மழைநீர் தொட்டிகள் அமைத்தனர்.
#அதன் பயனாக ஒரே ஆண்டில் தமிழக நிலத்தடி நீர் மட்டம் 12சதவீதம் உயர்ந்தது என்ற அதிகாரபூர்வ செய்தியும் வந்தது.
#அடுத்த வருடம் தேர்தல்.ஜெயலலிதா மீண்டும் நீர் மேலாண்மை சம்மந்தமான வாக்குறுதிகள் வழங்குகிறார்.
#ஆனால் கருணாநிதியோ 2ரூபாய்க்கு அரிசி, இரண்டு ஏக்கர் நிலம்,இலவச டிவி என்று அறிவிக்கிறார். விளைவு ஜெயலலிதா படுதோல்வி.
#திமுக அரசு அமைந்ததும் மழை நீர் தொட்டிகளை மக்கள் மூடினர்.திமுக அரசும் அதை கண்டுகொள்ளவில்லை.
#ஜெயலலிதாவிற்கு அகங்காரி என்ற பட்டமும் கிடைத்தது.அப்போது தான் ஜெயலலிதா தமிழக மக்களின் நாடிதுடிப்பை புரிந்து கொண்டார்.அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவும் இலவசங்களை வழங்கி வெற்றி பெற்றது தனி கதை.
#ஆம்!தமிழன் என்றோர் ஒரு இனமுண்டு!தனியே அவனுக்கோர் குணமுண்டு!
25 வயது க்கு மேல் உள்ள அனைவருக்கும் இந்த சம்பவம் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...