இரவு அர்த்தசாம பூஜை முடிந்து நடை சார்த்தியதும் திருக்கோயிலில் உள்ள எல்லா இறை மூர்த்திகளும், ரிஷிகளும், நவகிரக தேவதைகளும், திருத்தூணில் குடிகொண்ட தேவதைகளும் உயிர் பெற்று எழுந்து மூலவரான இறைவனை ஆராதிக்கத் தொடங்குகின்றன.
திருவிளக்கு ஏந்திய பாவைகளில் உள்ள விளக்குகளில் தாமாக ஜோதி தோன்றி பிரகாசிக்கத் துவங்கி விடும்.
அதனால்தான் திருப்பாவைகளில் உள்ள விளக்கில் இரவில் எண்ணெய் ஊற்றக் கூடாது என்ற விதியை ஆலயங்களில் விதித்துள்ளார்கள்.
இந்தத் திருப்பாவைகள் தங்களுடைய தூய்மையான ஜோதிப் பிரகாசத்தால் இறைவனை ஆராதிக்கும்போது பகல் நேரத்தில் அக்கோயிலில் விழைந்த மனிதத் தவறுகளால் நிறைந்த எண்ண தோஷங்களும், மந்திர, தந்திர தோஷங்களும், சங்கல்ப குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
எனவேதான் ஒரு கோயில் எவ்வளவுதான் குப்பை கூளத்துடன், எண்ணெய்ப் பிசுக்கு, ஒட்டடையுடன் காட்சி அளித்தாலும் இறைவனின் சான்னியத்தியம் என்பது சிறிதளவும் குறையாது.
இரவு நேர தேவ பூஜையே மக்கள் தவறுகளை நிவர்த்தி செய்கிறது. கோவிலின் சக்தியை தக்க வைத்துக் கொள்கிறது.
அதனால் தான் இரவு நேரங்களில் மனிதர்களின் பூஜைகள் நிறுத்தி வைக்க படுகின்றன.
No comments:
Post a Comment