Wednesday, June 15, 2022

காற்று வருதா?

 வாயை அகலமாக திறந்து வைத்துக்கொள்ளவும். கையை வாயின் மிக அருகே வைத்துக்கொண்டு ஊதவும். வெப்பமான காற்று வருதா? குட்

இப்ப வாயை குறுகலாக கிஸ் செய்வது மாதிரி வைத்துக்கொள்ளவும், ஊதவும். இப்ப குளிர்ந்த காற்று வருதா?
அறிவியலில் இதன் பெயர் ஜூல்ஸ் - தாம்சன் விளைவு (Joule Thomson effect). காற்றை குறுகலான பகுதியில் விட்டு, அது வெளியே வந்தால் அதன் வெப்பநிலை குளிர்ந்துவிடும். இது மனிதர்களுக்கு வேண்டுமானால் புதிய விசயமாக இருக்கலாம். ஆனால் கரையான் புற்றுகள் எல்லாமே ஜூல்ஸ் தாம்சன் விளைவை பயன்படுத்தி கட்டபடுபவையே. கரையான் புற்றில் பல லட்சக்கணக்கில் சிறு துளைகள் இருக்கும். வெளிக்காற்று அதனுள் புகுந்து கரையான் புற்றுக்குள் வருகையில் ஏசி போட்டது போல புற்றுக்குள் ஜில் என இருக்கும்.
ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் ஈஸ்ட்கேட் சென்டர் எனும் பெயரில் ஒரு பெரிய ஷாப்பிங் மால் கட்ட திட்டமிடபட்டது. அதன் உரிமையாளர் "ஏசி கட்டணத்தை கட்டிட வடிவமைப்பு மூலம்" குறைக்கவேண்டுகோள் விடுத்தார். சவாலை ஏற்றுக்கொண்டார் அதன் எஞ்சினியர் மைக் பியர்ஸ் (Mick Pierce)
கரையான் புற்றின் மாடலில் கட்டிடம் குளிர்விக்கபட்டது. பெரிய ஃபேன்கள் மூலம் குழாய்கள் வழியே காற்று சிறுதுளைகள் மூலம் மாலின் அறைகளுக்குள் செலுத்தபட்டது. ஒரு ஏசி இயந்திரம் கூட வாங்கப்படாததால் 3.5 கோடி டாலர் கட்டுமானபணியில் மிச்சமாகி ஏராளமான மின்கட்டணமும் மீதமானது. மற்ற மால்களை விட இதனால் அங்கே வாடகையும் குறைவு.
வங்கதேசத்திலும் ஜூல்ஸ் தாம்சன் விளைவை பயன்படுத்தி வீடுகளை குளிர்விக்கும் எளிய ஏசிமுறை பயன்பாட்டுக்கு வந்தது
வங்கதேசத்தில் 70% மக்கள் மெட்டல் கூரைகளின் கீழ் வசிக்கிறார்கள். வெயில் சமயம் வெப்பம் தாளித்து எடுத்துவிடும்.
ஈகோ கூலர் எனும் கம்பனி அந்த எளிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்தது. ஒரு கனமான அட்டையில் நிறைய துளைகளை போட்டார்கள். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களின் அடிப்பாகத்தை வெட்டினார்கள். அதை அந்த துளைகளுல் சொருகினார்கள். பாட்டில்களின் முடிகள் அகற்றபட்டன
அந்த அட்டை அதன்பின் வீட்டு ஜன்னல்களில் மாட்டப்பட்டது. ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒவ்வொரு அட்டை. வீட்டின் வெளிப்புறம் இருந்து காற்று அந்த பாட்டிலின் அடிப்பாகத்தில் புகுந்து கழுத்து குறுகிய பாகம் வழியே வீட்டினுள் வரும். இப்படி காற்றை குறுகிய வழியினுள் அனுப்புவதால், அது பாட்டிலை விட்டு வெளியேறுகையில் குளிர்ச்சி அடைந்துவிடும்.
இதன் விளைவாக சராசரியாக வீட்டுக்குள் ஐந்து டிகிரி வரை வெப்பம் குறைகிறதாம். ஜன்னல் அருகே படுத்தால் நல்லா ஜிலு, ஜிலுன்னு காற்று வந்து மக்கள் மகிழ்ச்சியாக தூங்குகிறார்கள்.
எளிய டெக்னாலஜி என்பதால் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதை காப்பி அடித்து பல வீடுகளில் இயற்கை ஏசி போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
வீடு கட்டுகையில் கூட இம்மாதிரி தொழில்நுட்பம் மூலம் சாளரங்களை அமைத்தால் ஏசி செலவு நிறைய மிச்சமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...