நாம் எடுத்த சில முடிவுகள்
பலன் தராது போகலாம்
நாம் செய்த சில செயல்கள்
தவறாக முடிந்து விடலாம்
நாம் குடுத்த வாக்குறுதியோ
நமக்கு குடுத்த வாக்குறுதியோ
நிறைவேற்ற படாமல் போகலாம்
சில ஏமாற்றங்கள்
சில தோல்விகள்
சில வாக்குவாதங்கள்
சில தவறான புரிதல்கள்
எதிர்பாராமல் ஏற்படலாம்
எல்லாமே சரியாக
நடந்துவிட வேண்டும் என்ற கட்டாயமில்லை
இருந்தும் யோசித்து
எந்த பயனும் இல்லை
எனவே எழுந்து நடங்கள்
எல்லாமே சரிசெய்திட முடியுமா
என்று தெரியாது -
எல்லாவற்றையும் கடந்து விட்டு
எல்லாவற்றையும் ஏற்று கொண்டு
நடங்கள் ஏனென்றால்
வாழ்தல் இனிது .
No comments:
Post a Comment