Wednesday, June 22, 2022

சமூக அக்கறையுடன்செயல்படுங்க!

 சமீபத்தில், உலக அளவில் கொண்டாடப்படும் நடிகர் ஒருவர் நடித்த திரைப்படத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.அந்தப் படத்தில், போதை மருந்துகளின் பயன்பாடு, போதை ஊசி, மாத்திரைகள், விபசாரம் போன்ற காட்சிகளுக்கு குறைவே இல்லை. சமீபகாலமாக திரைக்கு வரும் திரைப்படங்களில், இது போன்ற வஸ்துக்கள் பற்றியே அதிகம் காண்பிக்கப்படுகிறது. இவற்றை காணும் இளைய சமுதாயத்தினர், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் போன்றோரின் மனநிலையில், அது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்பதையும், அவர்களின் எதிர்காலம் பற்றியும், திரைப்படம் எடுப்பவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

இனியாவது ஆபாசம், போதை பழக்க காட்சிகள் இடம் பெறாத திரைப்படங்களை தயாரிக்க, திரைத் துறையினர் முன்வர வேண்டும். திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.எனவே, நல்ல திரைப்படங்கள் மட்டுமே, நல்ல ரசிகர்களையும், நல்ல சமூகத்தையும் உருவாக்கும். 'புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு; மது அருந்துதல் உயிரை கொல்லும்' என, சிகரெட் பாக்கெட்டுகளிலும், மது பாட்டில்களிலும், ஒரு ஓரமாக கண்ணுக்கு தெரியாத வகையில் போடுவதால் எந்தப் பயனும் இதுவரை இல்லை. அதையும் மீறி புகை பிடிப்பதும், மது குடிப்பதும் தொடர்கிறது.
அப்படிப்பட்ட நிலையில், திரைப்படங்களிலும் இத்தகைய காட்சிகளை பெரிய அளவில் காட்டினால், அது சமூகத்தை மேலும் கெடுக்கும் செயலாகவே அமையும்.அதனால், லாப நோக்கத்தோடு திரைப்படங்களை எடுக்கும் அதேநேரத்தில், கொஞ்சம் சமூக அக்கறையையும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...