Tuesday, June 14, 2022

*நேஷனல் ஹெரால்ட் மோசடி - ஓர் எளிய விளக்கம்.*

 1) நேஷனல் ஹெரால்ட் , 1930-வாக்கில் நேருவால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.

2).நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன.
3).2000-ஆண்டில், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
4) இதன் இயக்குநர்கள் *சோனியா காந்தி*, *ராகுல் காந்தி* மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் *மோதிலால் வோரா* ஆகியோர் தான்.
5). கடன் அதிகமானதால், *நேஷனல் ஹெரால்டை, யங் இந்தியா* என்னும் நிறுவனத்துக்கு விற்க, மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்கின்றனர்.
6).இதில் மகாக்கேவலம் என்னவென்றால், யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இயக்குநர்கள் *சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா* மற்றும் *ஆஸ்கார் பெர்னாண்டஸ்* ஆகியோரே!
7).யங் இந்தியா லிமிடெட், நேஷனல் ஹெரால்டின் 90 கோடி கடனைத் தீர்ப்பது என்றும், அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டின் 5000 கோடி சொத்துக்களை யங் இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதாகவும் தான் ஒப்பந்தம்.
8.) இந்த ஒப்பந்தத்தை யங் இந்தியாவுக்காக அதன் இயக்குநர் *மோதிலால் வோராவே* நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் *மோதிலால் வோராவுடன்* செய்து கொண்ட ஒப்பந்தம் தான் வேடிக்கை.
இரண்டு கம்பெனிக்கும் ஒரே இயக்குனர்.
(நீங்கள் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சிரிக்கக் கூடாது!)
9.) யங் இந்தியா, கடன் 90 கோடியை அடைக்க, காங்கிரஸ் கட்சியிடம் கடன் கேட்கிறது. இதற்காக நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் *சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே* கலந்துகொள்கின்றனர்.
10.) *மோதிலால் வோரா* தான் காங்கிரஸுக்கும் பொருளாளர். அவர் காங்கிரஸ் பொருளாளராக இருந்து 90 கோடிக் கடனை யங் இந்தியாவுக்குக் கொடுத்து, அவரே யங் இந்தியாவுக்காக அதனைப் பெற்று, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் *மோதிலால் வோராவிடம்* கொடுக்கிறார்.
அதாவது அந்தப்பக்கம் அவரே கொடுத்து இந்தப்பக்கம் அவரே பெறுகிறார். (மறுபடியும் சிரியுங்கள்)
11.) மறு நாள், *சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ்* கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில், நேஷனல் ஹெரால்ட் தேச விடுதலைக்கு செய்துள்ள சேவைக்குப் பரிசாக, அது கொடுக்க வேண்டிய 90 கோடி கடனை ரத்து செய்வதாக தெரிவிக்கப் படுகிறது!
12). இப்போது *நேஷனல் ஹெரால்டின்* கடன் அடைந்து விட்டது. அதன் 5000 கோடி சொத்து *யங் இந்தியா* லிமிடெட் க்கு சேர்ந்து விட்டது.
13). *சரி! யங் இந்தியாவின் 36 % பங்கு சோனியாவுக்கும், இன்னொரு 36 % பங்கு ராகுலுக்கும் சொந்தம்.மீதமுள்ள 28% பங்கு, மோதிலால் வோராவுக்கும், ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கும் சொந்தம்*
எனவே *5000 கோடி சொத்து* அலுங்காமல், குலுங்காமல், இவர்கள் கைக்கு வந்து விட்டது.
14). டில்லியில் *பகதூர் ஷா ஸஃபர் மார்கில் உள்ள 11 மாடிக் கட்டிடம்* ஒரு காலத்தில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தம்.
இப்போது அது இவர்களது *யங் இந்தியா* கைக்கு வந்து விட்டது. இதில் தான் பாஸ்போர்ட் அலுவலகமும், வேறு சில அலுவலகங்களும் இருக்கின்றன.
நம்மால் இப்படி ‘ரூம் “ போட்டு யோசித்து , ஒரு பைசா செலவில்லாமல் 5000 கோடி சொத்தை அடைய முடியுமா?
இனியும் இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால்..!!!!
என்ன ஆகும்.
*சுப்ரமணிய சாமி* அவர்கள் காங்கிரஸின் அம்மா பிள்ளை தில்லுமுல்லுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்!
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...