Monday, October 3, 2022

சுட்ட கத்திரிக்காய் தொக்கு பாரம்பரிய முறையில் வீட்டில் எளிதாக செய்வது எப்படி? இனிப்பும், புளிப்புமாக இருக்கும் கத்திரிக்காய் தொக்கு இப்படி செஞ்சா இட்லி, தோசைக்கு அருமையாக இருக்குமே!

 சுட்ட கத்திரிக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைத்து ஒரு சூப்பரான தொக்கு செய்தால் எப்படி இருக்கும்? கத்திரிக்காயை சுட்டு எடுத்து இது போல வெல்லம், புளி எல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான ஆரோக்கியமான சுட்ட கத்திரிக்காய் தொக்கு எப்படி எளிதாக நம் வீட்டிலும் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். சுட்ட கத்திரிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – ஏலு, வரமிளகாய் – எட்டு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கருப்பட்டி – பாதி உடைத்தது, புளித்தண்ணீர் – அரை கப், உப்பு – சுவைக்கு ஏற்ப. சுட்ட கத்திரிக்காய் தொக்கு செய்முறை விளக்கம்: முதலில் கத்திரிக்காய் தொக்கு செய்வதற்கு பெரிய பெரிய கத்திரிக்காயாக ஏழு கத்திரிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீளமான ஒரு கம்பியில் ஒவ்வொன்றாக எடுத்து சொருகி கொள்ளுங்கள். பின்னர் நெருப்பில் அதை 10 லிருந்து 15 நிமிடம் வரை வாட்டி எடுக்க வேண்டும். கத்திரிக்காயின் தோல் உரித்தால் அப்படியே உறிந்து வந்து விடும். அந்த அளவிற்கு கத்திரிக்காய் மேலே கருப்பாகி சுருண்டதும் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு கொஞ்சம் ஆற விட்டு விடுங்கள். அதன் பிறகு கத்திரிக்காயின் தோலை மட்டும் எடுத்துவிட்டு உள்ளே இருக்கும் சதை பற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு நிமிடம் லேசாக போட்டு வறுத்து எடுத்த வர மிளகாய்களை காம்பு நீக்கி மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வறுக்கும் பொழுது காம்புடன் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நைசாக ஒரு பேஸ்ட் போல அரைத்து எடுத்து வந்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் நீங்கள் எடுத்து வைத்துள்ள பாதி அளவிற்கு கருப்பட்டியை நன்கு இடித்து சேர்த்து கொதிக்க விடுங்கள். கருப்பட்டி அதில் கரைய வேண்டும். கருப்பட்டி இல்லாதவர்கள் கட்டி வெல்லத்தை பயன்படுத்தலாம்.ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி எடுத்து அதை ஒரு கப் அளவிற்கு வருமாறு நன்கு தண்ணீரில் ஊற வைத்து பிசைந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் நீங்கள் கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் வடிகட்டிய புளிச்சாறையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து வரும் பொழுது நீங்கள் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் பேஸ்டையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது நன்கு கெட்டியாக தொக்கு போல வர வேண்டும். அந்த அளவிற்கு கொதிக்க விடுங்கள். தொக்கு போல எண்ணெய் பிரிந்து திரண்டு வந்ததும் எடுத்து பரிமாற வேண்டியதுதான். இந்த சுட்ட கத்திரிக்காய் தொக்கு ரெசிபி இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவையிலும் அட்டகாசமாக இருக்கப் போகிறது. நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...