Friday, October 7, 2022

நாடு உருப்பட்ட மாதிரி தான்!

 மருதமலை என்ற திரைப்படத்தில், நடிகர்கள் அர்ஜுனும், வடிவேலும், ஒரு கைதியை சிறைக்கு அழைத்துச் செல்வர். அந்தக் கைதி, தன் அம்மாவை பார்க்க வீட்டுக்கு போக வேண்டும் என்பான். அர்ஜுன், 'வேண்டாம்... அனுமதி தர மாட்டேன்' என்பார். வடிவேலுவோ, 'அவன் போகட்டும்; தாயை கட்டி அழட்டும்' என்று அனுமதி கொடுப்பார். கைதியும் வீட்டுக்குள் போவான்.

வடிவேலுவும், அர்ஜுனும், அவனது வீட்டு வாசலிலே உட்கார்ந்திருப்பர். வெகு நேரமாகியும் கைதி வராததால், வடிவேலு, உள்ளே போய் எட்டி பார்த்தால், அவன் பின்பக்கம் வழியாக தப்பிச் சென்றிருப்பான்.

அது மாதிரியான ஒரு திட்டத்தை, பஞ்சாப் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அதாவது, மாதம் ஒரு முறை இரண்டு மணி நேரம், கைதிகள் தங்கள் மனைவியருடன் தனி அறையில் இருக்கலாம் என்பதே அந்தத் திட்டம்.

ஏற்கனவே, சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதியுண்டு. அப்படிப்பட்ட நிலையில், கூடுதல் சலுகையாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தால் பரவாயில்லை... இரண்டு, மூன்று மனைவியர் இருந்தால், ஒவ்வொரு மாதமும் மனைவியுடன் இருக்க வழங்கப்படும் சலுகை நேரம் அதிகமாகுமா? அதுவரை அவர்களுக்கு யார் காவல்? யார் பொறுப்பு?தப்பு செய்த கைதிகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, சிறையில் அடைக்கப்படுகின்றனர். அங்கும் மனைவியுடன் தங்க அனுமதித்தால், பின் எப்படி அவர்கள் திருந்துவர்.


latest tamil news



இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு பதில், சிறையிலேயே ஒரு பகுதியில் லாட்ஜ்களை கட்டி கைதிகளுக்காக வாடகைக்கு விடலாம். அதன் வாயிலாக, பஞ்சாப் சிறைத் துறைக்கு வருமானமாவது கிடைக்கும். சிறையிலேயே மனைவியுடன் குடும்பம் நடத்தும் வாய்ப்பை இப்படி வழங்கினால், தப்பு செய்வோர் மீண்டும் மீண்டும் அதை செய்து, சிறைக்குள் வருவது வழக்கமாகி விடும். அவர்களுக்குத் தான், மாதம் ஒரு முறை மனைவியுடன் தங்க வாய்ப்பு கிடைக்குமே... நல்ல அரசு... நல்ல திட்டம்... நல்ல அமைச்சர் தான். இப்படியே போனால், நாடு உருப்பட்ட மாதிரி தான்.


latest tamil news



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...