மதுரை மாநகராட்சி வார்டுகளில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் வளர்ச்சி பணிகளில் தி.மு.க. கவுன்சிலர்களின் கணவர்கள், உறவினர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஉரிமை அளிக்க வேண்டும் என்று தான் மாநகராட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வின் பெண் கவுன்சிலர்கள் கவுன்சில் கூட்டத்திற்கு வருவதோடு சரி. வார்டில் என்ன வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது என்று கவனிப்பதில்லை. கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டுகிறது.
நகர் செயலாளர் செல்லுார் ராஜூ கூறியதாவது: கவுன்சிலர்களுக்கு பதிலாக கணவர்கள் தான் வார்டுகளில் வலம் வருகிறார்கள். நேற்று கூட மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 76வது வார்டு பெருமாள் தெப்பத்தில் துாய்மை பணி நடந்தது. அங்கு மண்டல தலைவர் பாண்டிச்செல்வி வரவில்லை. அவரது கணவர் மிசா பாண்டியன், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஆகியோர் தான் வந்திருந்தனர். இனியும் தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் உறவினர்கள் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தலையிட்டால் அதை எதிர்த்து அ.தி.மு.க. நிச்சயம் போராட்டம் நடத்தும் என்றார்.
No comments:
Post a Comment