Friday, October 7, 2022

இந்த ஒரு பொருளை புரட்டாசி சனிக்கிழமைகளில் தானமாக கொடுப்பதால், பணத்தட்டுப்பாடும், உணவு தட்டுப்பாடும் நமக்கு எப்போதுமே ஏற்படாது.

 பொதுவாக நம் வாய்மொழி வார்த்தைகளில் தான தர்மம் செய்தால் நன்றாக இருப்போம், என்றோ இல்லை யாரோ ஒருவர் துயரத்தில் இருக்கும் போது அவருக்கு ஆறுதல் கூறும் போது கூட நீங்கள் செய்த தான தர்மங்கள் நிச்சயம் உங்களை காக்கும் என்று சொல்லுவதை நாம் கேட்டிருப்போம். அது வெறும் வாய்மொழி வார்த்தை மட்டும் அல்ல. அது தான் நம் வாழ்க்கையை சரியான வழியில் வாழ்வதற்கான மெய்யான வார்த்தை. எந்த ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தான தர்மங்களை செய்து முறைப்படி வாழ்கிறானோ, அவனை எப்பேர்பட்ட துன்பங்கள் தாக்கினாலும் அதிலிருந்து மீண்டு வந்து விடுவான். இத்தனை சிறப்பு மிக்க இந்த தானங்களில் எந்த தானத்தை நாம் செய்தால் நம் வாழ்வில் பணத்தட்டுப்பாடும், உணவு தட்டுப்பாடும் இன்றி வாழ்வோம் என்பதை பற்றிய தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். இத்தனை சிறப்பு மிக்க தானங்களில் மிகவும் சிறந்த ஒரு தானமாக விளங்குவது அரிசி தானம். இந்த அரிசி தானம் என்பது நமக்கு புதிதான விஷயம் அல்ல, நம் பழங்காலம் தொட்டு நம் முன்னோர்கள் செய்து வந்தது தானம் தான். ஆனால் அந்த தானத்தினால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.  பெரும்பாலும் கோவில்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க நினைக்கும் போது கூட அரிசியை முதலில் தான் தானமாக வாங்கி கொடுப்பார்கள். இந்த பழக்கமும் நம் வழக்கத்தில் நெடுங்காலமாக உள்ளது தான். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகை போட நாம் அரிசியை தானமாக பெற்று வந்து தான் போட வேண்டும் என்ற ஒரு நியதி உள்ளது. அதற்கான பல காரணங்கள் இருந்தாலும், இப்படி அரிசியை தானம் தருவதாலும் நம் வீட்டில் லஷ்மி கடாக்ஷத்திற்கு குறை இருக்காது. அதனாலேயும் தான் அந்த முறையும் இன்று வரை நாம் கடைபிடித்து வருகிறோம். இப்படி வழிபாடு செய்வதற்காக மட்டும் அரிசி தானம் செய்வது மட்டும் அல்ல, நம்மை விட ஏழை எளியவர்களுக்கு நாம் நிச்சயமாக மாதம் ஒரு முறையாவது உங்களால் இயன்ற அளவு (அது ஒரு கிலோ அரிசி யாக இருந்தால் கூட போதும்). அரிசியை நீங்கள் தானம் கொடுக்கும் போது, நீங்கள் தரும் தானத்தை விட பல மடங்கு பலனும் செல்வங்களும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். முன்பெல்லாம் கோவில் விசேஷங்கள், திருவிழாக்கள் என்று வரும் போது மூட்டை மூட்டையாக அரிசியை தானம் அளிப்பார்கள். இது கோவிலுக்காக தெய்வத்திற்கான தானம் என்பதே விட, அந்த அரிசியை கோவிலில் என்ன செய்வார்கள் அங்கு வரும் பக்தர்களுக்கும், எளியவர்களுக்கும் உணவு செய்து படைப்பார்கள். அந்த தர்மத்திற்காகவே இப்படி ஆன நடைமுறைகளை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். இது தெய்வத்தின் பெயராலே செய்தாலும் இந்த தானம் நமக்கான சுபிட்ச பலனை கட்டாயமாக தரும். இந்த அரிசி தானத்தை யார் ஒருவர் தவறாமல் தங்கள் வாழ்நாளில் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு அன்னலட்சுமி தாயாரின் அருளும், மகாலட்சுமி தாயார் அருளும் நிறைவாகவே கிடைத்து விடும். அவர்கள் வீட்டில் இல்லை என்ற வார்த்தையே இல்லாமல் வாழும் அளவிற்கு சுபிட்சத்தை இந்த தானம் சேர்க்கும். இவர்களின் அருளும் ஆசியும் கிடைத்து விட்டால் தனம், தானியத்திற்கு பஞ்சமே இருக்காது. எனவே அனைவரும் கட்டாயமாக அரிசி தானம் செய்ய வேண்டும். இந்த அரிசி தானத்தின் பலன் உங்களுக்கு மட்டும் இன்றி உங்களின் சந்ததியினரும் தானத்தின் பலன் கட்டாயமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் தீர பரிகாரம் எனவே நம்மால் முடிந்த அளவுக்கு இல்லாத ஏழை எளியவர்க்கு இந்த அரிசி தானம் செய்து இந்த தானத்தின் பலனை அடைந்து நல்ல வளமான வாழ்க்கைக்கான புண்ணியத்தை தேடி கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...