'அரசு பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை, 'ஓசி' பயணம் என்று நான் விளையாட்டாகத் தான் சொன்னேன்; அதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்' என்று, தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.
பஸ்சில் இலவசமாக பயணிக்கும் பெண்களை, ஓசிக்கிராக்கிகள் என்று கண்டக்டர்கள் எகத்தாளமாகப் பேசினால், 'உங்கள் அப்பன் வீட்டு பஸ்சா என்று முகத்தில் அடித்தது போல திருப்பிக் கேளுங்கள்' என, அமைச்சர் துரைமுருகன், 'அட்வைஸ்' பண்ணியதை, அமைச்சர் பொன்முடிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தன் அதிகப்பிரசங்கித் தனமான பேச்சுக்கு, தமிழகம் முழுதும் இந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பும் என்று, இந்த மகானுபாவர் பொன்முடி சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்.அமைச்சர் என்ற அந்தஸ்தில், இவருக்கு அரசு எத்தனையோ சலுகைகள் தருகிறதே... அவற்றை எல்லாம் வேண்டாம் என்று, இந்த பிரகஸ்பதி மறுக்கத் தயாரா?
கோடிக்கணக்கில் சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்து வைத்திருக்கிறாரே பொன்முடி; அவை அத்தனையும் நேர்மையாகச் சம்பாதித்தது என்று, இவரால் உறுதியாகச் சொல்ல முடியுமா? சொல்ல நினைத்ததை எல்லாம், பகிரங்கமாக சொல்லி வசைபாடி விட்டு, நான் விளையாட்டாகச் சொன்னேன் என்று அமைச்சர் பொன்முடி,
'ஜகா' வாங்குவது, பொதுமக்களின் காதுகளில் பூச்சூடும் வேலை தானே? பொறுப்பான பதவியில் இருக்கும் பொன்முடி, ஏதோ நாலாந்தர தி.மு.க., பேச்சாளர் மாதிரி மேடைகளில் பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகானதா என்று, சிந்தித்து பார்க்க வேண்டும்.
மேலும், 'தவறு செய்தவர்களை சர்வாதிகாரி போல தண்டிக்க தயங்க மாட்டேன்' என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், பொன்முடியின் கொச்சைப் பேச்சை தட்டிக் கேட்காதது ஏன்? கட்சிக்காரர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயம் என்று நடந்து கொள்வது, உண்மையான சமூக நீதி ஆகாது ஸ்டாலின் அவர்களே... அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் என யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள்; அதுவே, உண்மையான சமூக நீதியாகும்.

No comments:
Post a Comment