Wednesday, October 5, 2022

புரட்டாசி வளர்பிறை பத்மநாப ஏகாதசி வாழிபாடு சிறப்புக்கள்.

 பெருமாளை விரதமிருந்து வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த மாதமாக தமிழ் மாதங்களில் 6 வது மாதமாக வருகின்ற “புரட்டாசி” மாதம் திகழ்கிறது. அதிலும் அந்த மாதங்களில் வருகின்ற “ஏகாதசி” தினங்களில் விரதம் இருந்து, முறைப்படி பெருமாளைப் பூஜித்து வணங்குபவர்கள் “நாராயணன்” எனும் மகாவிஷ்ணுவின் பரிபூரணமான அருள் கடாட்சம் கிடைக்கப்பெறுவார்கள். அந்த வகையில் புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினம் விரதம் முறை தோன்றியதற்கான காரணம் மற்றும் அந்த தினத்தில் விரதம் அனுஷ்டித்தால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதையும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம். புரட்டாசி மாதம் வளர்பிறை காலத்தில் வருகின்ற ஏகாதேசி தினம் “பாபாங்குச ஏகாதசி” அல்லது “பத்மநாப ஏகாதசி” என அழைக்கப்படுகின்றது. இந்த நாளுக்கான விரதம் தோன்றியதற்கான காரணத்தை இங்கு நாம் பார்க்கலாம். விஷ்ணு புராணத்தின் படி முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தை சேர்ந்த மாந்தாதா என்கிற மன்னர் பாரதத்தில் ஒரு சிறிய நாட்டை ஆட்சி செய்து வந்தார். நீதி நெறியை கடைபிடித்து ஆட்சிபுரிந்த அந்த மன்னரின் ஆளுகைக்குட்பட்ட நாட்டில், மக்கள் அனைவரும் இந்த எந்தவிதமான குறைகள் இல்லாமல் நன்றாக வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் மாந்தாத மன்னர் ஆளுகின்ற நாட்டில் தொடர்ந்து மூன்று வருடத்திற்கு மழைப்பொழிவே இல்லாமல் வேளாண்மைத் தொழில் நசித்து, மக்கள் தண்ணீர் வறட்சியினாலும், பஞ்சத்தாலும் மிகவும் பாதிப்படைந்தனர். இதைக்கண்டு வருந்திய மன்னன், இந்த நிலைக்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா என்கிற ஏக்கத்தோடு பல வனப் பிரதேசங்ககளுக்கு சென்று தவமியற்றும் முனிவர் பெருமக்களை தரிசித்து, அவர்களின் அறிவுரையை பெற பயணம் மேற்கொண்டார். அப்படி ஒரு சமயம் வனப்பகுதியில் தவமிருந்த ஆங்கிரச முனிவரை மன்னர் சந்தித்தார். அப்போது அவரிடம் தன் நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் பஞ்ச நிலையை மன்னர் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட ஆங்கிரச முனிவர், சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து, தனது ஞானதிருஷ்டியால் மாந்தாத மன்னரின் நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்தார். அதாவது அந்த மன்னரின் நாட்டில் பிராமணன் அல்லாத ஒருவன் முறைபடி வேத, மந்திர பயிற்சி பெறாமல், தன்னிச்சையாக தனக்கென யாகங்கள் செய்து கொண்டதே இத்தகைய நிலை ஏற்பட காரணம் என மன்னரிடம் கூறினார். மேலும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பஞ்ச நிலை தீர, நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும் புரட்டாசி மாதம் வருகின்ற வளர்பிறை ஏகாதேசி தினம் விரதம் மேற்கொண்டால், நாட்டில் இருக்கின்ற கஷ்ட நிலைகள் இருந்து வளமை பெருகும் என மன்னருக்கு ஆங்கிரச முனிவர் அறிவுரை கூறினார். இதைக் கேட்டு நாடு திரும்பிய மன்னர், தன் நாட்டு மக்களுடன் சேர்ந்து புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினம் “பத்மநாப ஏகாதசி” விரதத்தை முறைப்படி மேற்கொண்டார். இதனால் நாட்டில் நல்ல மழை பொழிவு ஏற்பட்டு, தண்ணீர் பற்றாக்குறை தீர்ந்ததோடு பஞ்சமும், வறுமையும் நீங்கியதாக இந்த “பத்மநாப ஏகாதசி” விரதம் மகிமை குறித்து விஷ்ணு புராணம் கூறுகின்றது. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி விரத வழிபாடு எனவே புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டில் இருக்கின்ற பூஜையறையில் பெருமாள் படத்திற்கு வாசனை மிக்க மலர்களை சாற்றி, ஏதேனும் ஒரு இனிப்பு வகையை நைவேத்தியம் வைத்து, தீப, தூபங்கள் காட்டி “விஷ்ணு சகஸ்ரநாமம்” அல்லது ஏதேனும் விஷ்ணு மந்திரங்களை பாராயணம் செய்வதால் தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மற்றும் தண்ணீர், மேகம் ஆகியவற்றிற்கு அதிபதியாகிய வருணபகவான் ஆகியோரின் அருளாசிகள் ஒரு சேர கிடைக்க பெறுகிறார்கள். இதையும் படிக்கலாமே:நிரந்தரமான பண வரவு கொடுக்கும் புத்தம் புதிய 10 ஆன்மீக குறிப்புகள். இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாதவை. இதனால் இந்த பத்மநாப ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு சிறிது, சிறிதாக செல்வம் சேர்ந்து வளமான வாழ்க்கை அமையப் பெறுவார்கள். மேலும், அவர்கள் வசிக்கின்ற ஊரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. அவர்கள் வீட்டில் இருக்கின்ற கிணறு அல்லது ஆழ் குழாய்களில் எப்போதும் தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கும். எவ்விதத்திலும் தண்ணீருக்காக அலைகின்ற நிலை ஏற்படாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...