இராசராசன் அன்று சிவமதம் அல்லது சைவ மதம் ..
இன்னாளய நடைமுறைப்படி
இந்து மதம் தான்.
ராசராசன் உள்ளிட்ட மன்னர்கள் தன் ஆட்சி நிலைக்க புத்த,சமணம், திருமாலியம் ஆதரித்தாலும் சிவமதம் வளர உதவியது உண்மை. தீட்சதர்கள் மறைத்த தமிழ் திருமறைகளை அக்காலத்திலேயே பகுத்தறிவு வாதம் செய்து வெளிபடுத்தினார், எல்லா கோவில்களிலும் தேவாரம் பாட ஓதுவார் நியமித்தார்.
அவர் காலத்தில் அது சிவமதம் .
இன்னாளில் பலமதங்கள் ஒன்றாக்கப்பட்டு
இந்து என ஆனது.
இது இப்போதய அரசு சட்டப்படி இந்துமதத்தில் உள்ளடங்கியது.
எனவே இப்போதய நிலையில் அவரை இந்துவாகத்தான் சொல்லமுடியும்.
இந்துமதத்தில் இருந்து சைவ அல்லது சிவமதம் தனித்து வருங்காலத்தில் பிரிந்து தனி மதமானால்
அப்போதய நிலையில் சைவ அல்லது சிவ மதம் என்று சொல்லலாம்.
அதுவரை இந்துதான்
எனவே ராசராசனை இந்துவாக வலிந்து காட்டவேண்டியதில்லை... இன்று அவர் இருந்தால் அவர் இயல்பாகவே இந்துதான்.
No comments:
Post a Comment