ராவண வதம் முடிந்தது. இராமரும் இலட்சுமணரும் இலங்கையினுள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் இராவணனுடைய வயது முதிர்ந்த தாயான நிக்ஷா வேகமாக தள்ளாடியவாறு ஓடி தன் வீட்டில் ஒளிந்து கொண்டாள்.
இதைப் பார்த்த இலட்சுமணன் ஆச்சரியத்துடன் இராமரிடம், இந்த நிக்ஷாவின் குலமே அழிந்து விட்டது. இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகியும் இந்த வயதில் உயிர் வாழ விரும்பி ஓடி ஒளிகிறாளே ! விந்தையாக இருக்கிறது அண்ணா ! என்றார் இராமர், நிக்ஷாவை அருகில் அழைத்து, நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். எதற்காகப் பயந்து ஓடி ஒளிகிறாய் ? என்று கேட்டார்.
நிக்ஷா அச்சமின்றி நிதானமாக பதில் சொன்னாள், இராமா, இவ்வளவு நாள் நான் உயிருடன் உலாவியதால்தான் உன்னுடைய லீலைகள் பலவற்றை பார்க்க முடிந்தது. இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்தால் இன்னும் பல லீலைகளைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமல்லவா ? அதற்காகத்தான் அப்படி ஓடி ஒளிந்தேன். அண்ணனுக்கு அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த இலட்சுமணன், தன்னை மறந்து நின்றார்.
No comments:
Post a Comment