********************************************
மூன்றாவது கண்ணாக கைபேசி முளைத்துள்ளது. நமது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. இதைக் கவனத்தில் கொண்டு பயன்படுத்தக் கூடிய சொற்களில் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும்.
கட்சிக்கு செல்வாக்கு அதிகமாகி வருகிறது. இதுதான் எனக்கு பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மக்கள் அளித்த நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டும் என்பதே பயம்.
இத்தகைய சூழ்நிலையில் என்னை மேலும் துன்பப்படுத்துவது போன்று கழக நிர்வாகிகள், மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் என்ன சொல்வது ? யாரிடம் சொல்வது ?
நாள்தோறும் நம் கட்சியில் யாரும் புதுப் பிரச்னையை உருவாக்கி விடக்கூடாது என்று நினைத்தபடிதான் கண் விழிக்கிறேன். இது பல சமயங்களில் தூங்கவிடாமல் செய்துவிடுகிறது என்று இந்த நிகழ்வில் குறிப்பிட்டார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் தரமான, கண்ணியமான அரசியலுக்கு இந்தப் பேச்சே சான்றாகிறது.
கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் திருந்துவார்களா ? முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தூக்கத்தைத் தொடர்ந்து கெடுத்துக்கொண்டுதான் இருப்பார்களா என்று பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இதே கவலையை ப் பல சமயங்களில் நானும் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.
No comments:
Post a Comment