Wednesday, October 5, 2022

உடல் ஆரோக்கியத்தை காக்கும் வேர்க்கடலை பொடி கிச்சடி. பெயரே வித்தியாசமா இருக்கு இல்ல டேஸ்ட்டும் ரொம்ப வித்தியாசமா, சூப்பரா இருக்குங்க வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

 வேர்க்கடலை உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் என்று புதிதாக யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் 10 வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் அத்தனை நோய்களை சரி செய்து விடும் தன்மை இந்த வேர்க்கடலைக்கு உண்டு. இது இதய நோய் புற்றுநோய் போன்றவை வராமல் காக்கிறது. நரம்பு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கூட இந்த வேர்க்கடலை ஒரு நல்ல மருந்து அந்த அளவுக்கு வேர்கடலையில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உண்டு. இதை நாம் தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் கட்டாயமாக எடுத்துக் கொள்வது சிறப்பு. அந்த வகையில் இந்த வேர்க்கடலையை பொடித்து ஒரு ஆரோக்கியமான முறையில் கிச்சடி எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். தேவையான பொருட்கள்: பச்சரிசி ஒரு – 1கப், வேர்க்கடலை – 1/2 கப் , வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கேரட் -1, பச்சைப்பட்டாணி -1/4 கப், கடுகு -1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், முந்திரி – 6, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி அளவு. முதலில் இந்த பச்சரிசியை நன்றாக அலசி ஒரு காட்டன் துணியில் பரப்பி ஈரம் இல்லாமல் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து அரை கப் வேர்க்கடலை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அதே பேனில் ஆற வைத்த அரிசியை கொட்டி அதில் இருக்கும் ஈரம் வற்றும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். ஈரம் வற்றினால் மட்டும் போதும் அரிசியை பொரிய விட்டு விட வேண்டாம். இப்போது வறுத்து வைத்த அரிசியையும் வேர்க்கடலையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து விடுங்கள்.  கிச்சடி தாளிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெய் நெய்யும் ஊற்றி விடுங்கள். இது காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு பொறிந்தவுடன் கடலைப்பருப்பு போட்டு அதன் பிறகு முந்திரியும் சேர்த்து லேசாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நான்கு பச்சை மிளகாய் கீறி அதில் கருவேப்பிலையும் சேர்த்த பிறகு, வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த பச்சை மிளகாய் வெங்காயம் அனைத்தும் லேசாக வதங்கியதும், ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சைப் பட்டாணியும் சேர்த்து வதக்கி விடுங்கள்.(பச்சரிசி ஒரு கப் வேர்க்கடலை, அரைக் கப்பாக ஒன்றரை கப் அளவிற்கு பொடிக்கு மூன்று கப் தண்ணீர் இது தான் அளவு) தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இந்த தண்ணீரை கொதிக்க விடுங்கள். இப்போது அந்த தண்ணீரில் காய்கள் அனைத்தும் வெந்து இருக்கும். அதன் பிறகு பொடித்து வைத்துள்ள அரிசி வேர்க்கடலை பொடியை இதில் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும் ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் தண்ணீர் எல்லாம் வற்றி இந்த அரிசி வேர்க்கடலையுடன் காய்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அருமையான கிச்சடி தயாராகி இருக்கும். இது பார்க்க ரவை கிச்சடி போலவே இருக்கும். இதையும் படிக்கலாமே: டீ எல்லாரும் தான் குடித்து இருப்போம். ஆனா இது மாதிரி ஒரு பர்பெக்ட்டான மசாலா டீ குடிச்சி இருக்கீங்களா, இத படிச்சிட்டு ட்ரை பண்ணி பாருங்க டீ டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்த உடன் ஒரு அரை எலுமிச்சை பழத்தை இதன் மேல் விழுந்து விட்டு விடுங்கள். சுவை இன்னும் சற்று கூடுதலாக இருக்கும். விருப்பம் இல்லாதவர்கள் இதை விட்டுவிடலாம். அவ்வளவுதான் உடலுக்கு மிகவும் சத்தான வேர்க்கடலை வைத்து அருமையான கிச்சடியை தயாரித்து விட்டோம். வேர்க்கடலையுடன் இதில் கேரட் பட்டாணி போன்ற காய்கறிகளும் சேர்த்திருப்பதால் குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு இது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...