ஒரு யானையும் ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியிருந்தது.
மூன்று மாதங்கள் கடந்து சென்ற வேளையில் நாயானது ஆறு குட்டிகளை பெற்றெடுத்தது.
பதினெட்டாம் மாதத்தில்,தனது மனதில் ஏற்பட்ட கேள்விகளை யானையை பார்த்து கேட்ட யானையிடம் நாய் சென்று,
நீ கர்ப்பமாக இருப்பது உண்மையா?
ஏன் கேட்கிறேன் என்றால்,
நாம் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகிவிட்டோம்.
நான் அரை டஜன் நாய்க்குட்டிகளை மூன்று முறை பெற்றெடுத்தேன்.
எனது குட்டிகள் இப்போது பெரிய நாய்களாக வளர்ந்துள்ளன.ஆனாலும் நீ இன்னும் கர்ப்பமாகவே அப்படியே இருக்கிறாய்... உனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று கேட்க,
அதற்கு யானை சொன்னது!!!
நீ வாழ்க்கையை இன்னும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் சுமப்பது நாய்க்குட்டி அல்ல... அது ஒரு யானை..
நான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரே ஒரு யானை குட்டியை மட்டுமே பெற்றெடுக்கிறேன்..
என் குழந்தை இம்மண்ணில் கால் வைக்கும் போது அதை பூமி உணர்கிறது..
என் குழந்தை சாலையைக் கடந்து செல்லும் போது, மனிதர்கள் நின்று ஆர்வம் மற்றும் அதிசயமாக பார்க்கிறார்கள்,போற்றுகிறார்கள்..நான் என் வயிற்றில் சுமப்பது அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது..எனவே நான் சுமந்து செல்வது வலிமையானது, சிறந்த படைப்பானது..
மற்றவர்கள் அவர்களது வெற்றியை அடையும் போது, உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்..அவர்களின் சாதித்த முடிவுகளை கண்டு பொறாமைப்படவேண்டாம்..
உங்கள் வெற்றியை நீங்கள் இன்னும் அடையவில்லையென்று விரக்தியடைய வேண்டாம்...
நீங்களே உங்களுக்குள் சொல்லுங்கள்..
"என் நேரம் வந்துவிட்டது.. அந்த வெற்றி பூமியின் மேற்பரப்பைத் தாக்கும் போது, மக்களால் நான் போற்றப்படுவேன்...
ஒவ்வொரு மனிதனுக்கும் "வசந்த காலம், இருண்ட காலங்கள் உண்டு" மனம் தளராது..
உங்கள் மனதை கட்டுப்படுத்தி, உங்கள் வழிகளை மாற்றி அமைத்து வெற்றியை நோக்கியும்,
உங்களை நிலைகுலைய செய்யும் எதிர் மறை எண்ணங்களை முற்றிலும் அழித்து,
மன வலிமையோடு வெற்றியை அடைந்து வாழுங்கள்...
No comments:
Post a Comment