இந்தியாவில் இந்து என்ற ஒரு மதமே இல்லை என்பது முடிவாகி விட்டால் நடக்கக் கூடிய விஷயங்களை Tiruchendurai Ramamurthy Sankar பட்டியலிட்டிருந்தார்.... அதன் நீட்சியாக கொஞ்சம் பட்டி பார்த்த பதிவு இது...
1) Hindu Marriage Act ஐ முதலில் நீக்க வேண்டிய தேவை வந்து விடும்.... அவரவர் இஷ்டப்படி பிரம்ம, தெய்வ, அர்ஷ, ப்ரஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராட்சசம், பைசாசம் என எட்டு வகைகளிலும்.... தமிழர்களுக்கென பிரத்தியோகமாக உள்ள சுப வீரபாண்டியன் வகையறா திருமணமும் செய்து கொள்ளலாம்...
3) இந்து மதமே இல்லை எனும்போது... 'இந்து சமயம்' என்பது அதைவிட அபத்தமான சொல்... காரணம் சமயம் என்றால் அது ஆதிசங்கரரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என ஷன்மதங்களைத்தான் குறிக்கும்... அல்லது அதற்கும் ஒரு படி முன்னே சென்று பழங்காலத்தில் நிலவிய 72 சமயங்களையும் பின்பற்றலாம்...
4) இந்து'சமய' அறநிலைத் துறைக்கும் வேலையில்லை... எனவே தமிழக அரசு இதை கலைத்துவிட்டு கோவில்களை அந்தந்த சமயத்தைச் சார்ந்தோரிடம் ஒப்படைக்க வேண்டும்...
5) இப்போது 'இந்து மதம்' என்று ஒரே மதம் இல்லையாதலால், முன்பு இருந்த 72 சமயங்களும் தனித்தனி மதங்களாக... அதாவது மைனாரிட்டி மதங்களாக அறிவிக்கப்படும்.... இந்து மதம் என்ற 'மெஜாரிட்டி' மதமே இல்லாத பொழுது கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் தமது 'மைனாரிட்டி மத' சலுகைகளையும் இழப்பார்கள்... காரணம் இந்தியாவில் எந்த மதமுமே மெஜாரிட்டி இல்லாததால்..
6) கல்வி / வேலை வாய்ப்புகளில் சாதிவாரி இட ஒதுக்கீடு என்பதே 'இந்து மத' மக்களுக்கு மட்டுமே என்பது இந்திய அரசியலமைப்பில் உள்ளது... இந்து மதத்தையே ஒழிந்தபின் இந்த இட ஒதுக்கீடுகளுக்கும் இடமில்லை; நீக்கப்படும்/படவேண்டும்... தேவைப்படின் 72 சமயங்களைச் சார்ந்தோருக்கு மட்டும் 'சமயவாரி' இட ஒதுக்கீடு கொண்டு வரலாம்...
7) சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவையும் இதன் மூலம் நிறைவேற்ற முடியும்...
கிணறு வெட்டினா பூதம் வரும் என்பார்கள்.... வெற்றிமாறனும், கமலும் தோண்டியிருப்பது தங்கச்சுரங்கத்தை; வாய்ப்பை நழுவ விடவேண்டாம்
No comments:
Post a Comment