அரிசியை பிரஷர் குக்கரில் சமைப்பதற்கும் வடித்து சமைப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? எந்த வகை சமையல் ஆரோக்கியமானது?
பிரஷர் குக்கரில் சமைக்காமல்
அரிசியை வடித்து சாப்பிடுவதில் இருக்கும் ஆரோக்கியமான விஷயம் இப்போது உள்ள பாட்டிமார்களுக்கே தெரியாது. காரணம் 50 ஆண்டுகள் முன்பே மிகவும் அதிதீவிர சந்தைப்படுத்தல் மூலமாக குக்கரில் வேக வைப்பது நல்லது என்று நம்பவைக்க பட்டு விட்டோம். அதை விட முக்கியமான விஷயம் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போக ஆரம்பித்த காலம் முதல் காலை நேர பரபரப்பை பெருமளவு தணியச் செய்தது குக்கர் தான்
ஆரோக்கியமானது என்பது இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. அதை விட கைக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான சமாசாரங்கள் ஏராளம் ஏராளம்.
உதாரணமாக
தினமும் போதிய இடைவெளிகளில் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது.
தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வது
பச்சை காய்கறிகள் பழங்கள் எடுத்து கொள்வது
…
இப்படி பல..
இன்னும் ஒரு ஆச்சரியம் தரும் விஷயம்..
அமெரிக்கா போன்ற வளர்ந்த மேலைநாடுகளில் சில ரெஸ்டாரன்ட்களில் விறகு அடுப்பில் வைத்து சமையல் செய்த கோழிக்கறி கிடைக்கும்.
விறகு தாண்டி மண்ணெண்ணெய், சமையல் வாயு, மின்சார அடுப்பு என்று போன பிறகு விறகு அடுப்பு சமையலில் ருசி கூடுதல் என்று கூடுதல் விலைக்கு அந்த ஐட்டங்களை விற்பனை செய்கின்றனர்.
No comments:
Post a Comment