Friday, October 7, 2022

சட்டப் போராட்டத்தை நிறுத்துங்க!

 ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அ.தி.மு.க.,வினர் ஒவ்வொருவரும், தங்களுக்கு கட்சிப் பதவி இருக்கிறதா, இல்லையா என்பதை, காலையில் பத்திரிகைகளை பார்த்து தான் உறுதி செய்து கொள்வர். அதுபோல, கட்சிப்பதவி இருக்கிறதா, இல்லையா என்பதை, தற்போது நீதிமன்றங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளும் நிலைமை உருவாகிஉள்ளது. அந்த அளவுக்கு, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினரின் சட்டப் போராட்டங்கள் தொடர்கின்றன. இதற்கெல்லாம் காரணம், பதவி ஆசை மற்றும் 'ஈகோ' பிரச்னை. தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு என்பது, அ.தி.மு.க.,வில் புதிதல்ல... 1973ல், 'எம்.ஜி.ஆர்., நடித்த, உலகம் சுற்றும் வாலிபன் படம் திரைக்கு வந்தால், நான் சேலை கட்டிக் கொள்வேன்' என, கடுமையாக விமர்சனம் செய்தார் மதுரை முத்து. படம் வெற்றி விழா கண்டதும், அவரது வீட்டில் அ.தி.மு.க., தொண்டர்கள் சேலைகளை குவித்தனர்.அதே மதுரை முத்துவை, அ.தி.மு.க.,வில் இணைத்த எம்.ஜி.ஆர்., அந்த நேரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வந்தார். அதை ஏற்றுக் கொள்ளாத பொதுக்குழு உறுப்பினர்கள், 'மதுரை முத்துவே வெளியே போ' என்று கூச்சலிட்டனர்.அவர்களை அமைதிப்படுத்திய எம்.ஜி.ஆர்., 'முத்து நம் கட்சிக்கு வேண்டும்; அவரை அ.தி.மு.க.,வின் அவைத் தலைவராக முன்மொழிகிறேன்' என்றார். மறுபேச்சு பேசாமல், பொதுக்குழு உறுப்பினர்கள் அதை வழிமொழிந்தனர். உடனே மைக் அருகே சென்ற மதுரை முத்து, 'உங்களை திட்டிய இந்த வாய்க்கு புற்றுநோய் வர வேண்டும்' என்று கூறி, எம்.ஜி.ஆரை பார்த்து கண் கலங்கினார்.'தொண்டர்கள் கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்' என, எம்.ஜி.ஆர்., அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் எச்.வி.ஹண்டே, வேலுார் ஜி.விஸ்வநாதனை மீண்டும் கட்சிக்கு அழைத்து பதவி கொடுத்தார். ஜெயலலிதாவை ஆபாசமாக பேசியவர் தான் காளிமுத்து. இருந்தும், அவரை கட்சியின் அவைத் தலைவராகவும், சட்டசபை சபாநாயகராகவும் நியமித்தார் ஜெயலலிதா.அப்படி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல விமர்சனத்தை தாங்கிக் கொண்டு, மனக்கசப்பை மறந்து கட்சி நலனுக்காக, அ.தி.மு.க.,வை வழிநடத்த தலைவர்கள் முன்வர வேண்டும். சட்டப் போராட்டத்தை நிறுத்தி, சமாதானமாக செல்ல வேண்டும். lll

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...