Friday, October 7, 2022

வான் வருவான்... வெல்வான்! : - இன்று இந்திய விமானப்படை தினம்.

 நாட்டை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது. இது முப்படைகளில் ஒன்று. 1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக அக்.,8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன் இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின், நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது.

 வான் வருவான்... வெல்வான்! : - இன்று இந்திய விமானப்படை தினம்

இப்போர்களில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. இயற்கை பேரழிவுகளின் போது, ஆபத்தான இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் விமானப்படை இடம் பெற்றுள்ளது.பிரிவுகள்: இந்திய விமானப்படையில் 1,40,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1720க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. பைட்டர்ஸ், டிரெய்னர்ஸ், டிரான்ஸ்போர்ட், ஹெலிகாப்டர், மைக்ரோலைட்ஸ், அல்ட்ராலைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் - 400' ஏவுகணை தொழில்நுட்ப கருவிகள் தொகுப்புகளை வாங்குவதற்கு சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.வேலைவாய்ப்பு : விமானப்படையில் டெக்னிக்கல், நான்- டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி, பிளையிங் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. தகுதிக்கேற்ப பல்வேறு விதமான பணி வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்கள் தாமாக முன்வந்து விமானப்படையில் சேர வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...