Monday, October 3, 2022

 ''சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அறநிலையத் துறையினர் காழ்ப்புணர்சியோடும், உள்நோக்கத்தோடும் செயல்படுகின்றனர்,'' என, கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2005 முதல் 2022 வரை உள்ள நகைகள் சரிபார்ப்பு பணி ஐந்து நாட்களுக்கு முன் முடிந்தது.


ஒத்துழைப்பு


இது குறித்து எவ்விதமான சான்றும் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்படவில்லை.அதிகார வரம்புக்கு உட்பட்டு அவர்கள் வரவில்லை. அழையா விருந்தாளியாக அறநிலையத் துறை வந்து ஆய்வு மேற்கொண்டனர். வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தோம்.மேலும் 1956ம் ஆண்டில் இருந்து 2005 வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்எனக் கூறினர்.


காழ்ப்புணர்ச்சி


ஏற்கனவே உள்ள நகைகள் சரிபார்ப்பு முடிந்த பிறகு மீண்டும் சரிபார்ப்பு என்பது தேவையற்றது; இதை நாங்கள் ஏற்கவில்லை.மேலும் 2022 வரை உள்ள நகைகளை 'சீல்' வைக்க வேண்டும் என அறநிலையத் துறையினர் கூறினர்; கோவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், அதற்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை.கடந்த 1956ல் இருந்து 2005 வரை மீண்டும் மறுமதிப்பீடு செய்வதாக கூறியிருப்பது, அறநிலையத்துறையின் உள்நோக்கம், காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.இனிவரும் காலங்களில் நடராஜர் கோவில் நகைகளை, தனி ஆடிட்டர் வைத்து, ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில், தீட்சிதர்கள் அடங்கிய குழுவினரோடு நாங்களே தணிக்கை செய்து, மக்களுக்கு தெரியும் வகையில் வெளிப்படையாக அறிவிப்போம்.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 15 லட்சத்திற்கு மேலான தணிக்கை குழு அறிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.நடராஜர் கோவில் விவகாரத்தில் மட்டும் காழ்ப்புணர்ச்சியோடு, தொந்தரவு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது வேதனை அளிக்கிறது.மேலும் நடராஜர் கோவிலில், தீட்சிதர்கள் பால்ய விவாகம் செய்தால் தான் கோவில் நிர்வாகம் பூஜை முறைக்கு அனுமதி அளிக்கும் என தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது; அது முற்றிலும் தவறு.


கைது



latest tamil news


திருமணம் ஆனவர்களாக இருந்தால் கூட, 25 வயதிற்கு மேல் முறையான வேதம் படித்து, ஆகம விதிகளோடு பயிற்சி முடித்து, சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை செய்த பின் பூஜைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.பால்ய விவாக புகாரில்,தீட்சிதர்களை போலீசார்கைது செய்த விதம், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, ரவுடிகளை கைது செய்வது போல் கைது செய்துள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் செயலர் ஹேமசபேச தீட்சிதர், பட்டு தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...