Wednesday, February 1, 2023

இதை படித்து நியாயத்தை சொல்லுங்க...இந்து அடையாளத்தை அழிக்க எடுத்த முதல் பணியும் கூட...

 பெயருக்கு பின்னால் #சாதி பெயர் சேர்த்துக் கொள்வதைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது.

சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான கரு. #பழனியப்பன் அவர்களும், நடிகை #பார்வதி_நாயர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
விவாதத்தில் சாதி பெயர்களை பின்னால் சேர்த்து கொள்பவர்களை சாதி வெறியர்கள் என்ற ரீதியில் வசைபாட ஆரம்பித்து விட்டார்கள்.
விவாதத்தில் கரு.பழனியப்பன் அவர்கள் கூறினார்கள்... நீங்கள் சாதி பெயரை பின்னால் சேர்த்துகொள்கிறீர்கள், ஆனால் என்னால் அது முடியவில்லையே...?
நான் பசியோடு இருக்கும் போது என்னைப் பார்க்க வைத்து நீங்கள் மட்டும் சாப்பிடுவது நியாயமா? என்று கேட்டார் உடனே எதிர்ப் பக்கத்திலிருந்த ஒருவர் எழுந்து, தவறுதான் இனிமேல் நான் சாதி பெயரை என் பின்னால் சேர்த்துகொள்ள மாட்டேன் என்று கரு.பழனியப்பன் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.
அதை பார்த்த ஒரு சிலரும் எழுந்து சென்று அந்தப்பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். இப்போது எதிர்ப்பக்கத்தில் நான்கு பேர் மட்டும் அமர்ந்திருந்தார்கள்
சரி ! அதை அப்படியே விட்டுவிட்டு என் கதையை கொஞ்சம் கேளுங்கள்...!
12ம் வகுப்பு முடித்தபிறகு நானும் என் நண்பனும் ஒரு அரசு கல்லூரிக்கு சென்று அப்ளிகேஷன் வாங்கினோம்... அது என் நண்பனுக்கு இலவசம்.
ஆனால் எனக்கு ரூ.500...!
சரிவிடு பரவாயில்லை....
என்னைவிட என் நண்பனுக்கு மார்க் குறைவு. அவனுக்கு அரசாங்க கல்லூரியில் இடம் கிடைத்தது. எனக்கு இடம் கிடைக்கவில்லை...
சரிவிடு !பரவாயில்லை...
நான் தனியார் கல்லூரியில் என் சொந்தப் பணத்தைக் கட்டிப் படித்தேன்....
ஆனால் என் நண்பன் அரசாங்க கல்லூரியில் இலவசமாக படித்தான்... இத்துடன் அவனுக்கு அரசாங்க கல்லூரியில் வருடாவருடம் அரசாங்கம் ஊக்கத் தொகையாக பணம் வேற கொடுத்தது...
சரிவிடு பரவாயில்லை...
பின்பு என் நண்பனுக்கு படித்து முடித்த முன்று,நான்கு வருடங்களில் அரசாங்க வேலை கிடைத்தது...
ஆனால் எனக்கு இன்னும் அரசாங்க வேலை கிடைக்கவில்ல......
ஆக இவ்வளவு சலுகைகளை அவன் சாதி அடிப்படையில் பெற்றுக்கொண்டு அவன் பேசுவது என்னவென்றல் ஏன் நீ உன் பெயர்க்கு பின்னால் உன் சாதியை சேர்க்கிறாய் ?.. என்று .
இதை எதற்கு இங்கே கூறினேன் என்றால்....
நான் பசியோடு இருக்கும் போது என்னை பார்க்க வைத்து நீங்கள் மட்டும் சாப்பிடுவது நியாயமா? என்று கரு.பழனியப்பன் கேட்டார் அல்லவா?
திரு. கரு.பழனியப்பன் அவர்களே...!
நாங்கள் சாப்பிட இருக்கும் சாப்பாட்டை நீங்கள் உங்கள் சாதியை காரணம் காட்டி பிடுங்கித் தின்கிறீர்களே? இது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?
உங்கள் பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்துகொள்ள வெட்கப்படும் நீங்கள் சாதி சலுகைகளை பெற மட்டும் வெட்கப் படுவதில்லையே ஏன்? அது மட்டும் இனிக்கிறதா? நாங்கள் உங்களை பெயருக்கு பின்னால் சாதி சேர்த்துகொள்ள கூடாது என்று வற்புறுத்தினோமா? இல்லையே...???
OC- வகுப்பை சேர்ந்தவன் என்பதால் கூலி வேலை செய்பவனைக்கூட அவர்கள் சொல்வது அவன் சாதி வெறியன் என்று... ஆனால் சாதியை வைத்து சலுகைகளைப் பெற்றுகொண்டு, டாக்டராகி ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு, வாழ்வின் வசதிகள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு மகனையும் மகளையும் பெரிய கல்லூரியில் படிக்க வைப்பவன் சாதி மறுப்பாளனாம்... நல்லா இருக்குயா உங்க நியாயம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...