அரசியலை தாண்டி இந்த ஜி ஸ்கொயரில் பெரிய பாடம் நிச்சயமாக உள்ளது.
இப்ப ரெய்டு ஆன பின் இரண்டில் ஒன்று நிச்சயமாகிவிடும்..
ஒன்று தப்பே நடக்கவில்லை என்றால்..
நியாயமான வகையில் தான்
2019-20 களில் மிகப்பெரிய நஷ்டத்தில் முப்பது கோடி க்கு மேல் இழப்பில் இருந்த நிறுவனம்
இரண்டு ஆண்டில் இத்தனை பெரிய பல ஆயிரம் கோடியான முதலீட்டு சாதனை எப்படி என்பதை நாட்டுக்கு பாடமாக சொல்ல வேண்டும்.
இந்நாட்டில் இத்தகைய இமாலய லாபம் தரும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளதை நாட்டுக்கு சொல்ல வேண்டும்.
அப்படி சொன்னால்.. மத்திய தொழில் வர்த்தக துறை மூலம் இவர்களுக்கு பெரிய விருது தந்து பாராட்டி அறிவிக்க வேண்டும்
இல்லை .. எனில்.
அநியாயமான கொள்ளை ஊழல் செய்யப்பட்ட மக்களின் காசு தான் பல ஆயிரமயிரம் கோடி என இவர்கள் வசம் சட்டவிரோதமாக குவிந்துள்ளது எனில்..
இனி எவரும் இதை செய்ய துணியாத அளவுக்கு பாடமாக தண்டனை அமைய வேண்டும்.. அதை நாடெங்கும் அறிவித்து சொல்லி எல்லோருக்கும் புரியும் படி கடுமையான தண்டனை அமைய வேண்டும்..
எது எப்படி என்றாலும் இதில் மிகப்பெரிய பாடம் இருக்கணும்.
அது நட்டுக்கு நல்லதாக இருக்கணும்..
இந்த இரண்டும் இல்லாமல் சொதப்பல் நாடக்ம் நடந்தால் மக்கள் மத்திய அரசை நம்ப மாட்டார்கள்..
இதை மத்திய அரசு உணர வேண்டும்.
No comments:
Post a Comment