தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட வந்த காலகட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றே என எடுத்துக் கூறி வைத்தியநாத ஐயர் ஆலய நுழைவு போராட்டத்தை 1939 ஆண்டு முன்னெடுத்தார்.
அவரது போராட்டத்திற்கு சில தலைவர்கள் ஆதரவு கொடுத்தார்கள் ஆனால் ஆதரவு கொடுத்த அவர்கள் போராட்டம் நடக்கும் தேதி அன்று ஓடி ஒளிந்து மறைந்து கொண்டார்கள்.
போராட்டம் நடக்கும் காலகட்டத்திற்கு மூன்று ஆண்டு முன்பே பெருந்தலைவர் காமராஜர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்து கோவில் பொற்றாமரை குளத்தில் தியாகி சத்தியமூர்த்தி ஐயர் தியாகி முனுசாமி பிள்ளை ஆகியோருடன் இருக்கும் அருமையான வரலாற்று பெட்டமாக கீழே இடம் பெற்றுள்ள புகைப்படம் இருக்கின்றது.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பது சான்றோர் வாக்கு அதன்படி ஆலய நுழைவு போராட்டம் யாரால் நடைபெற்றது அந்தப் போராட்டம் வெற்றி பெற யார் காரணம் என்பதை தமிழ் சமுதாய இளைஞர்கள் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.
No comments:
Post a Comment