கட்டை விரலை எடுத்துட்டாங்க; பொண்டாட்டி, புள்ளகுட்டி இருந்திருந்தா..." - பாவா லட்சுமணன் வருத்தம்!
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் ஒரே ஒரு வசனத்தின் மூலம் மனோகர் பிரபலமடைந்தவர் பாவா லட்சுமணன். அதாவது மாயி படத்தில் “வாம்மா மின்னல்” எனக் கூறுவார். இந்த வசனத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். வடிவேலு இவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். ஆனால் காமெடியனாக சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்காமல் போனார்.
இந்நிலையில், சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வாழ்வாதாரத்துக்கு வழியில்லாம நண்பர்களோட உதவியாலதான் நாள்களைத் தள்ளிக்கிட்டிருக்கேன். ஆறு மாசமா பட வாய்ப்புகளும் கிடையாது. இப்போ, கட்டை விரலையும் எடுத்துட்டாங்க. இந்த வலியை விட வாய்ப்பு கிடைக்காததுதான் பெரிய வலி. காயம் எல்லாம் சரியான பிறகுதான் வாய்ப்பு தேடமுடியும். அதுவும் கிடைக்குமான்னு தெரியல. உதவுறதுக்கு என்னைப் பெத்தவங்களும் உசுரோட இல்ல. நடிகருங்கன்னா நிறைய சம்பளம் வாங்குறாங்கன்னு வெளில நினைக்குறாங்க. என்னை மாதிரி துணை நகைச்சுவை நடிகர்களோட சம்பளம் ரொம்பக் குறைவுதான். கம்பெனியைப் பொறுத்து அஞ்சாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரைக்கும் கொடுப்பாங்க. பட வாய்ப்புகளும் எப்பவாவதுதான் வரும்.
இந்தப் பணத்தை வெச்சிக்கிட்டு சென்னையில் எப்படி வாழ்க்கையை ஓட்டமுடியும்? சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது, தனியார் மருத்துவமனையெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது.
"உங்கள் மனைவி, பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டேன்.
"எனக்கு இப்போ 58 வயசாகுது. திருமணமே பண்ணிக்கல. புள்ள குட்டின்னு இருந்தா நான் ஏன் உதவி கேட்கப்போறேன். எனக்கு ஒரேயொரு அக்காதான் இருக்காங்க. அவங்களும் சொல்லிக்கிற மாதிரியெல்லாம் வசதி கிடையாது. அதனால்தான், திரைத்துறையினரிடம் உதவியை எதிர்பார்க்குறேன்" என்கிறார் உருக்கமாக.
கடந்த சில மாதங்களாகவே பிரபலமான பழைய நடிகர்கள் பலர், வருமானமின்றி மருத்துவ செலவுக்குகூட பணம் இல்லாமல் தவித்து வரும் சூழல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment