நடிகர் மோகனால் பயன்பெற்றவர்கள் ஏராளம்!இவர் கிட்டத்தட்ட 50 இயக்குனர்களுக்கு மேல் வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறார்!
மணிரத்னத்திற்கும் இவர் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர்!இவரால் வாழ்வு கொடுக்கப்பட்ட இயக்குனர்கள் எல்லாம் இன்று மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள்!!
ஒரு காலத்தில் தொட்டதல்லாம் துலங்கி கொடிகட்டி பறந்த நாயகன் இன்று வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்!
ஆனால் யாரிடமும் தன்மானத்தை இழந்து வாய்ப்பு கொடுங்கள் என கையேந்தி நின்றது போல் தெரியவில்லை!
எனக்கு தெரிந்து இயக்குனர் மனோபாலா மட்டும் தான் அளிக்கும் பேட்டிகளில்,"எனக்கு வாழ்க்கை கொடுத்தது நடிகர் மோகன்தான்"என அடிக்கடி சொல்கிறார்!இவரால் வாழ்வு பெற்ற மற்றவர்கள் ஏதேனும் பேட்டிகளில் சொன்னது போல் தெரியவில்லை!
இந்த விசயத்தில் மனோபாலா எவ்வளவோ உயர்ந்து நிற்கிறார்!
சமுதாயத்தை பொறுத்தவரை நன்றி,விசுவாசம்,அன்பு என்பதல்லாம் ஒருவரால் கிடைக்கக்கூடிய ஆதாயத்தை வைத்துதான்!
நூற்றுக்கு தொன்னுத்தெட்டு சதவீதம் பேர் இப்படித்தான் மீதம் இரண்டு சதவீத நபர்கள் எல்லா மட்டங்களிலும் அன்பு,நன்றி,விசுவாசத்தோடு இருக்கிறார்கள்!
அந்த இரண்டு சதவீத மனிதர்களை கூர்ந்நு கவனித்தால் இவர்கள் பலரால் நம்பிக்கை துரோகங்களை சந்தித்தவராக இருப்பார்கள்!பலரால் ஏமாத்தப்பட்டு பொருளாதார நெருக்கடியில் வாழ்வார்கள்!
இதைத்தான் கலிகாலம் என்கிறது சாஸ்திரம்!
மற்றபடி நன்றாக இருந்தவர்கள் பின்னடைவை சந்திக்கும் போது அவர்கள் அழைக்காமலே போய் பேசுங்கள்,தைரியம் சொல்லுங்கள்!
ஆனால் நன்றாக வாழ்பவர்கள் அழைத்தால் மட்டும் செல்லுங்கள்!
இதுதான் வாழ்வின் யதார்த்தம்!
*இவரை போலவே திரைத்துறையில் நிறையப்பேருக்கு வழிகாட்டி,வாய்ப்பு வழங்கி கொடுத்துவிட்டு தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கும் இன்னொருவர் ஸ்டில் ரவி அவர்கள்!
No comments:
Post a Comment