ஆம்னி பஸ் ஆப்ரேட்டர் ஒருவரின் பதிவு. ஆம்னி பஸ் கட்டண கொள்ளை என்று கரித்து கொட்டும் நல்ல உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்
ஒரு பஸ் ஒரு தடவை (Trip) ஓடனும்ன்னா உத்தேச செலவு... ( தமிழ்நாடு பெர்மிட் வன்டியாக இருக்கும் போது)
டிரைவர் படி (Bata) - 2800.00
Cleaner படி (bata) - 400.00
Parking charges - 300.00
பூ மாலை பூஜை செலவு - 100.00
போலீஸ் பீட் மாமுல் - 400.00
டாக்ஸ் - (1,20,000/- For 90 days) - 1400.00
டோல்கேட் - 2500.00
Insurance (80,000/- for 365 days) - 250.00
Oil - 260.00
Bed spread Laundry & cleaning - 400.00
Drinking Water & ckeaning water - 100.00
Maintenance expenses + tyre - 2000.00
Total expenses - 23,310/- ரூபாய் கண்டிப்பாக எடுத்து வைக்க வேண்டும்.
இது போக ஆபிஸ் செலவுகள்... கமிஷன்ல கழித்து கொள்ளலாம்.
36 Sleeper full ஆக போனால் மட்டும்
36 × 1300.00 = 46,300/-
இதில் Online commission 12.5% கழிக்க வேண்டும்
உத்தேசமாக 5800.00 போய்விடும்.
கைக்கு வருவது - 40, 500/-
வண்டி வழி செலவு - 23,310.00 கழித்தால்
மீதம் தொகை - 17,190.00
பார்த்தா உடனே ஒரு பஸ் வாங்கி விடனும்ன்னு ஆசையா இருக்குமே....
அப்படி தான்ய்யா போய் மாட்டுனோம்...
எல்லா நாளும் 40,000 கலெக்ஷன்ல ஓடாது... விஷேச நாள் மற்றும் சனி ஞாயிறு மட்டும் தான் ஓடும்....
மற்ற நாள்களில் சராசரியாக 20 சீட் ஆகும்...
20 × 1300.00 = 26000.00
Less commission - 3250.00
இருப்பு - 22,750.00
இதில் வழி செலவு 23,310.00 கழித்தால்
அதிக பற்று = - 500.00
இதற்கு மேல் தான் லாபம் கிடைக்கும்...
இதில் முக்கிய Commitment ஆன Finance due amount பற்றி பேசப்படவில்லை...
மேலும் மாதாந்திர தெண்ட தொகையான
Check report, compouding fine, traffic violation fine என மாதம் 10,000.00 போகும்...
பொதுவாக ஆம்னி பஸ் தொழில் என்பது 365 நாட்களில் 165 நாட்கள் லாபமாகவும் 200 நாள் சராசரி அல்லது நட்டத்தில் நடக்கும் தொழில்...
பணம் போட்டு பணம் எடுக்கும் தொழில்...
உதாரணமாக 2016 வண்டி(ஜோடி) மார்கெட் விலை 45 லட்சம் To 56 லட்சம்...
2019- 2020 ஜோடி - 90 லட்சம்...
இது எதுவுமே தெரியாம கொள்ளை அடிக்கிறாங்க என்று கூவும் முட்டாள் ஜனங்களிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி...
சந்து கடையில 5 ரூபாய்க்கு விற்கும் இட்லியை சரவண பவன்ல போய் 40 ரூபாய் கொடுத்து வாயை மூடி சாப்பிடுறீங்களே... அது கட்டண கொள்ளை இல்லையா...
இட்லியை விடுங்கைய்யா.... அட்லி படத்துக்கு FDFS ன்னு 2000 5000 ன்னு வாங்குறாங்களே அது கட்டண கொள்ளையா தெரியலையா...
ஒரு குடும்பம் தியேட்டர்ல படம் பார்த்துவிட்டு வர எவ்ளோ செலவு ஆவுது... பாப்கார்ன் பாக்கெட் என்ன விலை....
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆன்டி மாதிரி தீபாவளி பொங்கல் வந்தா உங்களுக்கு ஆம்னி பஸ் தான் ஊறுகாயா....
No comments:
Post a Comment